ஓபிஎஸ்சை வரவேற்க வந்த இபிஎஸ் ஆதரவாளர் : காத்திருந்த தொண்டர்களுக்கு ஓபிஎஸ் செய்த செய்கை.. விமான நிலையத்தில் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
25 June 2022, 9:20 pm

கடந்த 23ந்தேதி சென்னை வானகரகத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் பல்வேறு களேபரங்களுக்கிடையே அதிமுக பொதுக்குழு நடந்து முடிந்தது. பெரும்பாலான பொதுக் குழு உறுப்பினர்களின் ஆதரவை பெற்று அந்தக் கூட்டத்தில் தனது பலத்தை கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நிரூபித்தார்.

கட்சியை மீண்டும் ஒற்றை தலைமை அத்யாயத்திற்கு திருப்பி பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை பொறுப்பேற்க வைப்பதற்கு ஜூலை 11ந்தேதி என்கிற நாளையும் குறித்துவிட்டனர் அவரது ஆதரவாளர்கள்.

இந்த நிலையில் பொதுக்குழு முடிந்த கையோடு அன்று இரவே டெல்லி கிளம்பினார் ஓபிஎஸ். அங்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு, ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து அதிமுகவின் ஆதரவை தமக்கு தரும்படி கேட்டார்.

இந்நிலையில் இரண்டு நாள் டெல்லி முகாமை முடித்துவிட்டு இன்று மாலை சென்னை திரும்பினார் ஓ.பன்னீர்செல்வம். விமானநிலையத்தில் அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஏற்கனவே எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்திருந்த தென்சென்னை மாவட்ட மகளிரணி இணைச் செயலாளர் ஜெயதேவி உள்ளிட்டோரும் அங்கு வந்திருந்து ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்றனர்.

கட்சியில் தனது பிடி தளராமல் இருக்க டெல்லி பயணம் மூலம் ஓ.பன்னீர் செல்வம் வகுத்த வியூகங்கள் என்ன, அந்த வியூகங்கள் வெற்றி பெறுமா என்பது அடுத்தடுத்த நிகழ்வுகளில் தெரிந்து விடும்.

  • Salman Khan Net Worth Releasedதலையே சுத்துது… சல்மான் கான் சொத்து மதிப்பு கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!
  • Views: - 535

    0

    0