பேரக் குழந்தைகளுடன் திடீரென வந்த இபிஎஸ்… அலைமோதிய கூட்டம்!
Author: Udayachandran RadhaKrishnan11 February 2025, 6:00 pm
தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு உகந்த தைப்பூச நாளான இன்று சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்து சிலுவம்பாளையத்தில் உள்ள முருகன் கோவிலில் அதிமுக பொதுச் பொதுச் செயலாளரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மனைவி, மகன்,மருமகள், பேரக் குழந்தைகள் என குடும்பத்தினருடன் பங்கேற்று சுவாமி தரிசனம் மேற்கொண்டார்.
இதையும் படியுங்க : கட்டுக்கடங்காத கூட்டம்… பழனியில் தீர்ந்து போன பஞ்சாமிர்தம் : பக்தர்கள் வைத்த டுவிஸ்ட்!
முன்னதாக சுவாமிக்கு பல்வேறு திரவியங்கள் கொண்ட அபிஷேகங்கள் செய்த பின்னர் தீபாராதனை காட்டப்பட்டது அப்போது பக்தர்கள் அரகரா அரகரா முழக்கமிட்டனர். மேலும் தைப்பூசத்தில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.