ஈரோடு இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கலில் தகராறு… தேர்தல் அலுவலர் – போலீஸ் இடையே வாக்குவாதம்!

Author: Udayachandran RadhaKrishnan
13 January 2025, 7:18 pm

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ம்தேதி நடைபெறுகிறது.இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10ம் தேதி தொடங்கியது.அரசு விடுமுறை தவிர்த்து வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் 13ம் தேதியான இன்றும் மற்றும் கடைசி நாளான 17ம் தேதி மட்டுமே உள்ளது.

இதற்கு முன்னதாக தேர்தலில் போட்டியிட போவதாக திமுக ,நாம் தமிழர் அறிவித நிலையில் திமுக தரப்பில் வேட்பாளர் சந்திரகுமார் நிறுத்தப்பட்டுள்ளார்.இதையடுத்து அதிமுக,பாஜக, தேமுதிக போன்ற பிற முக்கியமான அரசியல் கட்சிகள் போட்டியிட போவதில்லை அறிவித்தது.

இதனால் வேட்புமனு தாக்கல் இரண்டாவது நாளான சேலத்தை சேர்ந்த ராஜசேகர், ஈரோட்டை சேர்ந்த கோபாலகிருஷ்ணன், முகமது கைபீர், மற்றும் சென்னை விருகம்பாககம் பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து,தருமபுரியை சேர்ந்த ஆணந்தன், ராமநாதபுரத்தை சேர்ந்த பானைமணி என 6 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இதில் கோவை சேர்ந்த நூறு முகமது முதல் நாளில் வேட்புமனு தாக்கல் செய்து இருந்த நிலையில் 2வது முறையாக இன்றும் வேட்புமனு தாக்கல் இதன் மூலம் ஈரோடு கிழக்கு தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிடக் கூடியவர்கள் என ஒருவர் இருமுறை என 9பேர் 10வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க: தூத்துக்குடியில் 20 ஏக்கர் நிலம்.. விருதுநகரில் 11 வீடுகள்.. முள் படுக்கை சாமியார் சிக்கியது எப்படி?

இதற்கு முன்னதாக தர்மலிங்கம் என்பவர் சுயேட்சையாகப் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்ய வந்த நிலையில் காலதாமதமாகியதால் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்காததால் போட்டியிட வேட்பாளர் தர்மலிங்கத்துடன் வந்த முத்துச்சாமி என்பவர் காவல்துறை அதிகாரி யுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.,

3மணிக்கு முன்பே மாநகராட்சி அலுவலகத்திற்குள் வந்த நிலையில் தற்போது அனுமதி மறுப்பது எப்படி எனவும் இதுவே வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாளாக இருந்தால் என்னவாகும் என்று கேள்வி எழுப்பினார்.

இதன் பின்னர் பாதுகாப்பு பணியில் இருந்த டிஎஸ்பி அவரை சமாதானம் செய்து வெளியே அனுப்பினர்.அப்போது வேட்புமனு தாக்கல் செய்ய வந்து வேட்புமனு செய்ய முடியுமால் போன தர்மலிங்கம் ,வேட்புமனு தாக்கல் செய்ய 2:15மணி க்கு வந்த நிலையில் 2:30மணிக்கு அறைக்குள் சென்று விட்டோம் சிறிய கட்சிகள் வரக்கூடாது என்ற நோக்கில் காலதாமதம் செய்யப்படுகிறது,

Erode By Poll

வரும் காலத்தில் சிறிய கட்சி வளர காவல்துறை தேர்தல் ஆணையம் உதவியாக இருக்க வேண்டும் கடைசி நாளான 17ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வேன் என தெரிவித்தார்…

  • Jana Nayakan Vijay ஜனநாயகன் கடைசி படம் அல்ல… சம்பவம் LOADING : இயக்குநரின் மாஸ் அறிவிப்பு!