ஈரோடு இடைத்தேர்தலை இந்தியாவே திரும்பி பார்க்க வைக்கும் : ட்விஸ்ட் வைத்த செங்கோட்டையன்!!

Author: Udayachandran RadhaKrishnan
12 February 2023, 11:20 am

ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளருக்கு மக்கள் ஆதரவு உள்ளது.

குறிப்பாக பெண்கள் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க தயாராகி விட்டனர். எம்.ஜி.ஆருக்கு திண்டுக்கல் தேர்தல், ஜெயலலிதாவுக்கு மருங்காபுரி தேர்தல் போன்று எடப்பாடி பழனிசாமிக்கு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் திருப்பு முனையாக அமையும்.

இந்தியாவே ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலை திரும்பி பார்க்கும் வகையில் தேர்தல் முடிவு அமையும். எத்தனை தடை இருந்தாலும் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தென்னரசு வெற்றி பெறுவார்.

இது அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும், 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி வெற்றி பெற்று நிரந்தர முதல்-அமைச்சர் ஆக உதவும். இவ்வாறு அவர் கூறினார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!