சாலையோரம் பதுங்கியிருந்த சிறுத்தை.. திம்பம் மலைப்பாதை வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை.. வைரலாகும் ஷாக் வீடியோ!!
Author: Babu Lakshmanan14 August 2023, 12:37 pm
திண்டுக்கல் – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை திம்பம் மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் வாகன ஓட்டிகள் ஜாக்கரதையாக பயணிக்க வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசிக்கின்றன. குறிப்பாக சிறுத்தை, புலி, கரடி உள்ளிட்ட வனவிலங்குள் இரை தேடி நடமாடுவது வழக்கம். திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் இரவு 9 மணி வரை மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்படுவதால் வனச்சாலைகள் வாகனங்கள் நடமாட்டம் இன்றி அமைதியாக காணப்படுகிறது.
இந்நிலையில், நேற்றிரவு திம்பம் மலைப்பாதை 6-வது கொண்டை ஊசி வளைவில் சிறுத்தை ரோட்டை கடக்க முயன்றது. அப்போது அந்த வழியாக சென்ற வாகன ஒட்டிகள் சிறுத்தை நடந்து செல்வதை பார்த்து வாகனத்தை நிறுத்தி, வாகனத்தின் ஹெட் லைட் வெளிச்சத்தில் பார்த்தனர். அதில், சிறுத்தை ரோட்டை சிறிது தூரம் நடந்து சென்று, பின்னர் வாகன வெளிச்சம் காரணமாக திரும்பி வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.
இதனை காரில் சென்ற வாகன ஓட்டிகள் தங்களின் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இது தற்போது வைரலாகி வருகிறது.