‘இது அறியா வயசு… தமிழக அரசியல் வரலாறு தெரியாமல் பேசும் அண்ணாமலை’ ; EVKS இளங்கோவன் காட்டம்

Author: Babu Lakshmanan
31 May 2024, 2:25 pm

எம்மதமும் சம்மதம் என்ற கொள்கையுடன் இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை குறுகிய வட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அடைக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியின் தமிழக மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :- இந்திய வரலாற்றில் இது போன்ற மோசமான தேர்தல் நடந்தது கிடையாது. மோடி தேர்தல் ஆணைய வழிமுறைகளை மீறி தியானம் செய்கிறார். இது எந்த வகையில் நியாயம். ராகுல்காந்தி ஆட்சி வந்த பிறகு தேர்தல் ஆணையத்தால் தவறு செய்தவர்கள் நீதிமன்றத்தில் நிற்க வைப்பார்கள்.

மேலும் படிக்க: முதல்ல CM தனிப்பிரிவுலேயே… அரசு ஊழியர்களையும்‌ வாட்டி வதைக்கும்‌ விடியா திமுக அரசு ; இபிஎஸ் பாய்ச்சல்!!

காந்தியை தெரியவில்லை என ஆப்பரிக்கவில் கூட யாரும் சொல்லமாட்டார்கள். பிரதமராக இருக்கும் ஒருவர் காந்தியை தெரியவில்லை என சொல்வது நம்மை பார்த்து நாம் வெட்கப்பட வேண்டும். ஸ்டாலின் ஆட்சி, காமராஜர் ஆட்சி என்ன சொல்வது ஒன்றும் பிரச்சனை இல்லை.

ஜெயலலிதா படித்த பள்ளியில் மாதா கோவில் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி ஜபத்தில் ஈடுபட்டார். இப்தார் விருந்தும் வைத்தார். ஜெயலலிதாவை பொருத்தவரைக்கும் எம்மதமும் சம்மதம் என்று கொள்கையுடன் இருந்தார். அவர் குறுகிய வட்டத்திற்குள் அடைக்கப்பட்ட பார்க்கிறார் அண்ணாமலை . இதற்கு காரணம் அண்ணாமலைக்கு அறியா வயசு, தமிழக அரசியல் வரலாறு தெரியவில்லை.

இந்தியா கூட்டணியில் அனைத்து கட்சியின் ஒன்றிணைந்து ராகுல் காந்தி, ஸ்டாலின் பிரதமரை தேர்ந்தெடுப்பார்கள். ஆண்டுக்கு ஒரு பிரதமர் என வந்தாலும் என்ன நஷ்டம். நாலாம் தேதி பிறகு அதிமுக இருக்காது என அண்ணாமலை கூறி வருவது நான்காம் தேதி பிறகு அண்ணாமலை தமிழகத்தில் இருப்பாரா என தெரியாமல் மற்றவரை பற்றி பேசக்கூடாது. தியானத்தை மோடி கைவிட வேண்டும் எனில் அது அவருக்கு எதிராக அமையலாம், என தெரிவித்தார்.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!