ஈரோடு : வடக்கில் உள்ள மாற்று சக்திகளுக்கு இடமளிக்க கூடாது என்று மக்கள் தீர்மானித்து விட்டதாக திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, அதிமுக, திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் களைகட்டி வருகிறது. காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து திமுக எம்பியும், திமுக துணை பொதுச்செயலாளருமான கனிமொழி பிரச்சாரம் செய்து வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக, மாற்று கட்சியில் இருந்து திமுகவில் ஏராளமானோர் இணையும் நிகழ்ச்சி திமுக எம்பி கனிமொழி முன்னிலையில் நடைபெற்றது.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு உறுதியாகியுள்ளது. ஆனால் மிகப்பெரிய வெற்றி வாய்ப்பை உருவாக்கி காட்ட வேண்டும் என்கிற முதல்வரின் அன்பு கட்டளை நிறைவேற்றி காட்ட வேண்டும் என்பதற்காக அமைச்சர்கள் பணியாற்றி வருகின்றனர்.
ஏனென்றால் மக்கள் அதிமுக கட்சியில் தங்களுக்குள் உள்ள குழப்பத்திற்கும் தீர்வு இல்லையென்றால் வடக்கில் உள்ள மாற்று சக்திகளுக்கு இடமளிக்க கூடாது என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர்.
தமிழர்களுக்கு எதிராக தமிழர்களுக்கு துரோகம் செய்யும் அத்தனை பேருக்கும் தோல்வியாக இந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அமையும் என்று நம்பிக்கை உள்ளது, என தெரிவித்துள்ளார்.
நீலகிரியில், மகளை பாலியல் தொல்லை அளிப்பதற்கு தந்தைக்கு அனுமதித்ததாக தாய் உள்பட இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நீலகிரி:…
வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த் தனது மனைவி அபிராமியுடன்…
நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை வரவேற்பதாக சீமான் கூறியுள்ளார். சென்னை:…
100 கோடியை தொட்ட டிராகன் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆன டிராகன் திரைப்படம் எதிர்பார்த்ததை…
விழுப்புரத்தில் டீயில் எலி மருந்து கலந்து கொடுத்து காதலனைக் கொல்ல முயன்ற காதலியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். விழுப்புரம்:…
எங்களை விட்டுப் போகாதீர்கள் என எவ்வளவோ கேட்டோம், அவராகவே போனார் என ஓபிஎஸ்சை அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் விமர்சித்துள்ளார்.…
This website uses cookies.