கடைகளை ஒதுக்காத நகராட்சி நிர்வாகம்.. காய்கறிகளை சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டம்..!

Author: Vignesh
23 ஆகஸ்ட் 2024, 2:47 மணி
Quick Share

சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தினசரி சந்தையில் உள்ளூர் விவசாயிகளுக்கு முறையாக கடைகளை ஒதுக்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து விற்பனைக்காக கொண்டு வந்த காய்கறிகளை சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டி நகராட்சியில் தினசரி காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த காய்கறி சந்தை பழுதடைந்ததால் புதிதாக காய்கறி சந்தை கட்டப்பட்டு தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை புதிதாக கட்டப்பட்டுள்ள தினசரி மார்க்கெட்டிற்கு நகராட்சி நிர்வாகம் அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், தங்களுக்கு முறையாக கடைகளை ஒதுக்கப்படவில்லை எனவும், இது குறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திற்கு மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவும், உள்ளூர் விவசாயிகளுக்கு முறையாக கடைகளை ஒதுக்கப்படவில்லை எனவும் கூறி இன்று விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தாங்கள் விற்பனைக்காக கொண்டு வந்த காய்கறிகளை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • PK என்ன ஒரு தைரியம்… புதிய கட்சியை தொடங்கி மதுக்கடைகளை திறப்பேன் என பிரசாந்த் கிஷோர் வாக்குறுதி!
  • Views: - 139

    0

    0