அமைச்சரின் துறை சார்ந்த ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் ஐ.டி.ரெய்டு ; துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிப்பு….ஈரோட்டில் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
26 May 2023, 2:47 pm

ஈரோட்டில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை ஒப்பந்ததாரர்களின் வீடுகளில் ரெய்டு நடந்து வரும் நிலையில், பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மதுபாட்டில்களை விநியோகிக்கும் போக்குவரத்து பணிகளை ஒப்பந்ததாரர் சச்சிதானந்தம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், அவரது வீட்டில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டிற்குள் புகுந்த அதிகாரிகள் அங்கிருந்த மடிக்கணினி, கணினி மற்றும் சச்சிதானந்தம் பயன்படுத்தி வந்த டைரி உள்ளிட்ட வற்றை பறிமுதல் செய்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், சச்சிதானந்தம், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பயன்படுத்தி வந்த வங்கி கணக்குகள், வங்கி லாக்கர்கள் குறித்த ஆவணங்களை ஆய்வு செய்தனர். அதோடு, அவரது வீட்டில் உள்ள பத்திரங்கள், நிலம் வாங்கியதற்கான ஆவணங்கள் போன்றவற்றையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இந்த சோதனையின் காரணமாக ஈரோடு சக்தி நகர் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சோதனையை அடுத்து அவரது வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 459

    0

    0