ஆவேசமாக காரை துரத்திய காட்டு யானை… சாமர்த்தியமாக எஸ்கேப்பான ஓட்டுநர்…!! அதிர்ச்சி வீடியோ!!

Author: Babu Lakshmanan
6 July 2022, 5:49 pm

சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானை ஒன்று காரை துரத்தும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. இவை உணவு மற்றும் தண்ணீர் தேடி சாலையோரம் நிற்பதும் சாலையைக் கடப்பதும் வாடிக்கையாக வருகின்றன.

ஆசனூர் வனப்பகுதி விட்டு வெளியேறிய காட்டு யானை ஒன்று ஆசனூர் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் நின்று தீவனம் உட்கொண்டிருந்த நிலையில், திடீரென அவ்வழியாக வந்த காரை வேகமாக துரத்தி சென்றது. வாகன ஓட்டுனர் சாமர்த்தியமாக வாகனத்தை பின்னோக்கி நகர்த்தி தப்பினார். இதன் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

https://vimeo.com/727362012
  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?