10 வருஷமா கேட்டும் எங்க பேச்சுக்கு மதிப்பே இல்ல.. தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் அறிவிப்பு..!!!
Author: Udayachandran RadhaKrishnan17 April 2024, 7:18 pm
10 வருஷமா கேட்டும் எங்க பேச்சுக்கு மதிப்பே இல்ல.. தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் அறிவிப்பு..!!!
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அடுத்துள்ள கம்பிளியம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது காட்டுப்பட்டி கிராமம்.இந்த பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் காட்டுப்பட்டியில் இருந்து சிங்காரக்கோட்டை செல்லும் சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.ந்த சாலையின் வழியாக அணைக்குளம் புதூர், சீலமுத்து நாயக்கனூர்,புதுகலிங்கம்பட்டி, காரைக்கட்டூர்,தம்பி நாயக்கன்புதூர் ஆகிய பகுதிகளுக்கு இந்த சாலை வழியாகத்தான் மாணவ,மாணவிகள் மற்றும் பொதுமக்கள் தினமும் சென்று வருகின்றனர்.
இந்த சாலை குண்டும்,குழியுமாக உள்ளதால் பேருந்து மற்றும் ஆட்டோக்கள் கூட இந்த வழியாக செல்வதில்லை.இதனால் பள்ளிக்குச் செல்லும் மாணவ,மாணவிகள் பொதுமக்கள் மோட்டார் சைக்கிள் மற்றும் நடந்து செல்கின்றனர்.
சில நேரங்களில் இருசக்கர வானகங்களில் செல்லும் போது வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் இந்த பகுதி பொதுமக்கள் சாலை வசதிகோரி தேர்தலை புறக்கணிக்க போவதாக பேனர் மற்றும் போஸ்டர் ஒட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
அதில் காட்டுப்பட்டியில் இருந்து சிங்காரக்கோட்டை செல்லும் சாலையில் 40 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்து வரும் வேட்பாளருக்கே எங்கள் ஓட்டு என குறிப்பிட்டுள்ளனர்.
நாளை மறுதினம் தேர்தல் நடக்கும் இந்நிலையில் சாலை வசதி கோரி தேர்தலை புறக்கணிப்பு செய்யப் போவதாக அறிவித்து பேனர் மற்றும் போஸ்டர் ஒட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.