கஷ்டம் மேல் கஷ்டம் வந்தாலும் அதிர்ஷ்டம் உங்களுக்குத்தான்… கடக ராசிக்காரர்களே? குருபெயர்ச்சி விபரத்தை தெரிஞ்சுக்கோங்க!

Author: Udayachandran RadhaKrishnan
23 April 2023, 4:29 pm

குரு பகவான் தனது ஐந்தாம் பார்வையாக தனவாக்கு குடும்ப ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக சுகஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக ரண ருண ரோக ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

குடும்ப பாசத்திற்கு கட்டுப்பட்டு நடக்கும் குணம் கொண்ட கடக ராசிக்காரர்களே! நீங்கள் புதுமை படைக்க எண்ணுபவர்கள். இந்த குரு பெயர்ச்சியால் எதிர்ப்புகள் விலகும். கடன் தொடர்பான பிரச்சினைகள் தீரும். பல வகையான யோகங்கள் ஏற்படும். உடல் நோய்கள் நீங்கி ஆரோக்கியம் உண்டாகும். மன குழப்பம் நீங்கும். ஆனால் பிறருடன் பழகும் போது நிதானம் தேவை.

தொழில், வியாபாரம் முன்னேற்றம் காணப்படும். தொழில் தொடர்பான காரியங்கள் வெற்றி பெறும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலிப்பது வேகம் பிடிக்கும். வியாபாரம் தொடர்பான பிரச்சினைகளில் சாதகமான நிலையே உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நன்மை தீமை பற்றிய கவலைபடாமல் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை திறம்பட செய்வார்கள். போட்டிகள் மறையும்.

குடும்பத்தில் திருமணம் தொடர்பான காரியங்கள் சாதகமாக பலன் தரும். குடும்பத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். உங்களது வார்த்தைக்கு மதிப்பு கூடும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன கசப்பு நீங்கும். பிள்ளைகள் உங்களது பேச்சுக்கு செவி சாய்ப்பார்கள். வாய்க்கு ருசியான உணவும் கிடைக்கும். பெண்களுக்கு கடன் தொடர்பான பிரச்சினைகள் தீரும். பணவரத்து கூடும். மனக்குழப்பம் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

அரசியல்வாதிகள் மக்களின் ஆதரவைப்பெற அவர்களின் தேவை அறிந்து செயல்படுவது உத்தமம். அமைச்சர்களின் கெடுபிடிகள் அதிகரிப்பதால் கட்சி மாறக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். உடனிருப்பவர்கள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். எந்தவொரு காரியத்திலும் வெற்றி கிட்டும். கலைத்துறையினர் எதிர்பார்க்கும் வாய்ப்புகள் தடையின்றிக் கிட்டும். வரவேண்டிய தொகைகளும் எதிர்பார்த்தபடி வந்து சேரும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகளும் அதன்மூலம் அனுகூலமான பலன்களும் உண்டாகும். சககலைஞர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். கடன்கள் குறையும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் சாதகமான நிலை காணப்படும். திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவீர்கள்.

பரிகாரம்: திங்கள் கிழமைகளில் சோமவார விரதம் அனுஷ்டிப்பது கஷ்டங்களை போக்கும்

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 385

    0

    0