என் நம்பருக்கு MISSED CALL கொடுத்தாலும், உடனே அழைத்து பேசுவேன் : கோவை அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
6 April 2024, 5:13 pm

என் நம்பருக்கு MISSED CALL கொடுத்தாலும், உடனே அழைத்து பேசுவேன் : கோவை அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு!

கோவையில் சுட்டேரிக்கும் வெயிலிலும் 37 இடங்களில் தீவிர பிரச்சாரம் செய்த அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன். கோவை பாராளுமன்ற தொகுதிக்கு அதிமுக சார்பில் சிங்கை ஜி.ராமச்சந்திரன் போட்டியிடுகிறார்.

இவர் கோவை தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்து வருகிறார். இன்று மருதமலை அடிவாரத்தில் அதிமுக கோவை வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமாருடன் இணைந்து பிரச்சாரத்தில் தொடங்கிய சிங்கை ஜி.ராமச்சந்திரன் பேசும்போது, நான் வெளியூர்காரன் இல்லை, உங்கள் ஊர்க்காரன்.

நடுத்தர குடும்பத்தைச் சேர்தவன். போன் செய்தால் எடுப்பேன். மிஸ்டுகால் இருந்தாலும் உடனே கூப்பிடுவேன். மத்தியில் யார் பிரதமர் ஆனாலும் நான் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றால் கோவைக்கு தேவையானதை போராடி பெற்று வருவேன்.

ஒவ்வொரு ஊருக்கென்று ஒவ்வொரு தொழில் உண்டு அதேபோல் சின்னதடாகம் பகுதியில் செங்கல் சூளை தான் முக்கிய தொழிலாக இருந்தது. அதனை அழிய விடக்கூடாது. அது தான் அந்தப் பகுதி மக்களுக்கு வாழ்வாதாரம் அளித்து வந்தது. எனவே மீண்டும் கொண்டுவர முயற்சி எடுப்பேன்.

அப்போது திடீரென கூட்டத்திலிருந்து ஒரு பெண்மணி ரேஷன் கடைகளில் பிளாஸ்டிக் அரிசி போட்டு எங்களுக்கு வயிற்று வலி வந்து விட்டதாக கூறினார். பால் விலை, கரண்ட் பில், தண்ணீர் வரி, வீட்டுவரி, சொத்து வரி என எல்லா வரிகளையும் ஏற்றிவிட்டனர் திமுகவினர்.

பொய், பொய்னா திமுக தான். 3 ஆண்டுகளில் திமுக ஒன்றும் செய்யவில்லை, 10 ஆண்டுகளில் மோடி இருந்தும் 10 பைசாவிற்கு பிரயோஜனம் இல்லை.

ஒரு போன் செய்து பிரச்சனையை சரிசெய்து விடுவேன் என்று ஒரு சிலர் கூறி வருகிறார்கள். மோடிக்கு நமது மக்கள் தெரியுமா, நம் மொழி தெரியுமா, கலாசாரம் தெரியுமா. அவருக்கு தெரிந்தது எல்லாம் குஜராத், மகாராஷ்டிரம் என்ற அந்த ஏரியாவா தான் பார்ப்பார்.

கொரோனா காலத்தில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அனைவரின் வீட்டிற்கும் அதிமுகவினர் 1 மாதத்திற்கு தேவையான மளிகைப் பொருட்கள் வழங்கினோம்.

தாலிக்கு தங்கம் திட்டம் ரத்து செய்ததாலும், நகைகளை வங்கியில் வைத்தால் வட்டியில்லாமல் மீண்டும் எடுத்துக்கொள்ளலாம் என்று திமுக கூறியதன் பேரில் வைத்துவிட்டு இன்று பல தாய்மார்கள் கழுத்தில் வெறும் மஞ்சள் கயிறோடு இருக்கின்றீர்கள்.

எப்போதும் உங்களுடன் கைகோர்த்து நிற்கும் அதிமுக வேட்பாளராகிய சிங்கை ஜி.ராமகிருஷ்ணன் என்ற எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று பேசினார்.

இந்த பிரச்சாரம் நால்வர் நகர், நவாவூர், சோமையம்பாளையம், கஸ்தூரிநாயக்கன்பாளையம், காளப்பநாயக்கன்பாளையம், ஆசிரியர் காலனி, கணுவாய், குப்பநாயக்கன்பாளையம், கணுவாய், திருவள்ளுவர் நகர், சோமையனூர், ஊஜ்ஜையனூர், சின்னதடாகம், மடத்தூர், நஞ்சுண்டாபுரம், வரப்பாளையம், தாளியூர் சஞ்சீவி நகர், பன்னிமடை மொத்தம் 37 இடங்களில் வாக்காளர்களை சந்தித்து வாக்குகளை சேகரித்தார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 293

    0

    0