திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காரணம்பேட்டையில் உள்ள உழவாலயத்தில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்களின் 99 ஆவது பிறந்தநாள் விழா மற்றும் உழவர் உழைப்பாளர் கட்சி,தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவர் செல்லமுத்து தலைமையில் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் உழவர் உழைப்பாளர் கட்சியின் பொதுச்செயலாளர் திருநாவுக்கரசு,பொருளாளர் பாலசுப்பிரமணியம்,செயலாளர் ஈஸ்வரன்,மாநில மகளிரணி தலைவி ராஜரீகா மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் அனைத்து விவசாய பொருட்களுக்கும் எம்.எஸ்.சாமிநாதன் குழு பரிந்துரையின்படி குறைந்த ஆதார விலையை நிர்ணயிக்க மத்திய மாநில அரசுகளை தொடர்ந்து வலியுறுத்துவது எனவும்,100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும் பணியாட்களை விவசாய பணிகளுக்கும் சேர்த்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஆனைமலை நல்லாறு திட்டங்களை நிறைவேற்றவும் மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தியும், நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்து தலைவர் முடிவு எடுக்கும் முழு அதிகாரம் வழங்குவது எனவும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து வகையான கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துவது என பல்வேறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து பேசுகையில் மழையினால் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள இழப்பீடு தொகை 20000 ரூபாயை 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தர வேண்டும் எனவும் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி ஆதரிக்கும் அதிமுக வேட்பாளருக்கே எங்களுடைய ஆதரவு எனவும் பன்னீர் செல்வத்திற்கு இரட்டை இலை சின்னம் கொடுத்தால் மட்டும் ஜெயிக்கவா போகிறார் எனவும், அனைத்து மாவட்ட செயலாளர்களின் ஆதரவும் எடப்பாடி பழனிச்சாமிக்கு உள்ளது எனவும் தெரிவித்தார்.
மேலும் இருவரையும் இணைக்க பாஜக முயற்சி செய்வதாக கூறுவது அனைத்தும் அரசியல் நாடகம் எனவும் தெரிவித்துள்ளார்.
கலைஞருக்கு பேனா சிலையை கட்சிப் பணத்தில் வைத்தால் தவறில்லை,மக்கள் வரிப்பணத்தில் எழுதாத பேனாவை கடலில் வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பேசும்போது : இன்று நடைபெற்ற மருதமலை…
வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்த கூலி தொழிலாளி ஜாகீர் (50) என்பவர் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 10…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
கோவையில் பல்வேறு கடைகளில் வீட்டிற்கு உள்ளே வளர்க்கும் செடிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த வகை செடிகள் சின்கோனியம் ஸ்நேக் பிளான்ட்…
இந்திய இசையமைப்பாளர்களின் அதிக சம்பளம் வாங்கும் பிரபலமாக இருப்பவர் அனிருத்தான். இவர் இசையமைக்கும் அத்தனை ஆல்பமுமே ஹிட் ஆவதால் தயாரிப்பாளர்கள்…
This website uses cookies.