கலைஞர் உயிரோட இருந்திருந்தால் கூட இந்த ஆட்சியை விரும்பியிருக்க மாட்டார் : போராட்டத்தை அறிவித்த காவிரி டெல்டா சங்கம்!

Author: Udayachandran RadhaKrishnan
2 September 2023, 3:59 pm

கலைஞர் உயிரோட இருந்திருந்தால் கூட இந்த ஆட்சியை விரும்பியிருக்க மாட்டார் : போராட்டத்தை அறிவித்த காவிரி டெல்டா சங்கம்!

டெல்டா மாவட்டத்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சுற்றுபயணம் வந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாயிகளை சந்திக்கவில்லை , விவசாயத்திற்கு தண்ணீரை கர்நாடாகவிலிருந்து பெற்று தருகிறோம் என்கிற அறிவிப்பும் வெளியிடவில்லை .

மாறாக முதலமைச்சர் வரும்போது மட்டும் ஆறுகளில் தண்ணீர் திறந்துவிடபட்டு முதமலமைச்சர் சென்றவுடன் அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் நிறுத்தபட்டுவிட்டது .

தண்ணீரை நம்பி உழவுசெய்தவிவசாயிகள் வானம்பார்த்த பூமிக்கு ஏங்குவதுபோல் காத்துகிடக்கின்றனர். இதற்கு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் காவிரி டெல்டாவிவாசய சங்கத்தினர் கடும் தெிர்பு தெரிவித்துள்ளனர்.

அன்றையிலிருந்து இன்றுவரை கர்நாடகத்திலிருந்து தண்ணீரை பெற்று தாருங்கள் என்று விவசாயிகள் சொல்லி வருகிறோம். திமுக அரசு விவசாயிகள் சொல்வதை செவிகொடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் கொஞ்சம் கூட கேட்பதில்லை .

முதலமைச்சர் காவிரி டெல்டா சுற்று பயணத்தின் போது மட்டும் தண்ணீரை திறந்து விடுகிறார்கள் விவசாயிகள் பிரச்சனை பண்ணி விடக்கூடாது என்பதற்காக இந்த செயலை செய்கிறார்கள் .

முதலமைச்சர் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு சென்ற உடனே தண்ணீரை தேக்கி விட்டார்கள் விளம்பரத்திற்காக செய்யும் செயல் விவசாயத்திற்கு ஒன்றும் ஆகாது .

விவசாயிகளுக்கு மிகப்பெரிய துரோகத்தை இழக்கிறீர்கள் விவசாயிகளை வஞ்சிக்கிறீர்கள் . நாடகம் ஆடுகிறீர்கள் கர்நாடகாவில் நான்கு அணைகளும் 90 டிஎம்சி தண்ணீர் இருக்கிறது டி.கே.சிவகுமார் நீர்வளத்துறை அமைச்சர் நீங்கள் இணக்கமாக தானே இருக்கிறீர்கள் கூட்டணி ஒன்றாக தானே இருக்கிறீர்கள் அவர்களிடம் கேட்டு வாங்குவதில் உங்களுக்கு என்ன அச்சம் .

டெல்டா அழிந்துவிட்டது. நீர்வளத் துறை அமைச்சர் தூங்கிக் கொண்டிருந்தாரா? நாகப்பட்டினம் மாவட்டம் முழுமையாக முடிந்துவிட்டது. திருவாரூர் மாவட்டம் 75% முடிந்துவிட்டது தஞ்சை மாவட்டத்தில் முதல் பகுதி கடைமடை பகுதி நடுப்பகுதி எந்த பகுதியில் நீர் ஒழுங்காக பாயவில்லை 5000 கன அடி தண்ணீர் பாய்ந்தது என்றால் எடப்பாடியார் காலத்தில் முறையாக தூர்வாரப்பட்டது கல்லணையில் வெண்ணாறு தலைப்பிலிருந்து 15 கிலோமீட்டர் தொடர்ந்து தூர்வாரப் படவில்லை வெட்டி தூர்வாரப்பட்ட வாய்க்காலையே மீண்டும் தூர்வாரபடுகிறார்கள்.

அடைப்பு உள்ள வாய்க்காலை தூர் வாரப்படவில்லை தூர்வாருகும் பணியில் இவர்கள் நோக்கமே பணம் சம்பாதிப்பது மட்டுமே முற்றிலும் ஊழலாக உள்ளது. 80 கோடி நிதி ஒதுக்கீடு செய்து 20 கோடிக்கு மட்டுமே வேலை செய்கிறார்கள் . திமுக அரசை கண்டித்து முதல் கட்டமாக வருகிற செப்டம்பர் மாதம் தஞ்சையிலே மாபெரும் போராட்டம் நடைபெற உள்ளது .


அதனை தொடர்ந்து சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் போராட்டம் விவசாயிகளுக்கு துரோகம் இழைத்து விட்டது இந்த திமுக அரசு விவசாயிகளின் பாவத்தை சம்பாதித்து விட்டீர்கள் .

டெல்டாவை சோமாலியாக்கி நாடு கடத்த போகிறீர்கள் விவசாயிகள் நடமாடிக் கொண்டிருக்கிறோம் உயிர் எங்களிடம் இல்லை உடல் மட்டும்தான் உள்ளது. டெல்டா மாவட்டத்திற்கு வந்தபோது எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை கர்நாடகாவில் இருந்து தண்ணீரை பெற்று தருகிறோம் என்ற அறிவிப்பும் இல்லை எந்த உத்தரவாதமும் இல்லை .

இறந்த கலைஞர் கூட இந்த ஆட்சியை விரும்ப மாட்டார் இவர்கள் செய்யும் ஆட்சி விளம்பர ஆட்சி விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கின்ற ஆட்சி என குற்றம் சாட்டினார் .

  • Sivakarthikeyan transition from TV to big screen சீரியல் வாய்ப்புக்கு ஏங்கிய சிவகார்த்திகேயன்..NO சொன்ன சின்னத்திரை நடிகர்..!
  • Views: - 346

    0

    0