திராவிடம் பற்றி பள்ளி மாணவர்களுக்கு கூடத்தெரியும்..ஏன் எடப்பாடி பழனிசாமிக்கு தெரியவலில்லை? அமைச்சர் பொன்முடி கேள்வி!!
Author: Udayachandran RadhaKrishnan29 October 2023, 11:46 am
ஆரியம் திராவிடம் பற்றி பள்ளி மாணவர்களுக்கு கூடத்தெரியும்..ஏன் எடப்பாடி பழனிசாமிக்கு தெரியவலில்லை? அமைச்சர் பொன்முடி கேள்வி!!
*நீட் தேர்வை தடுத்து நிறுத்த வேண்டும் என முதல்வர் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, தீர்மானம் நிறைவேற்றி ஆளுநர் கையொப்பத்துடன் குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது, இது நாள் வரை அதற்கு எந்தவித பதிலும் வராத காரணத்தால் நேற்றைக்கு முதல் நாள் கூட குடியரசுத் தலைவர் சென்னைக்கு வந்தபோது அதனை விண்ணப்பமாக முதலமைச்சர் அவர்கள் அளித்திருக்கிறார்.
இளைஞர் அணியை வழிநடத்திச் செல்லக் கூடிய இளைஞர் மேம்பாட்டு துறையினுடைய உதயநிதி அவர்களும் மாணவரணி இளைஞர் அணி மருத்துவர் அணி ஆகிய மூன்று அணிகளும் சேர்ந்து இந்த பணியை தமிழகத்தில் குறைந்தபட்சம் ஒரு 50 லட்சம் பேர்களிடம் ஆவது கொண்டு செல்ல வேண்டும் முடிவு செய்து இதிலே கட்சி வேறுபாடு ஜாதி மத வேறுபாடு இன்றி அனைவரும் ஒருங்கிணைந்து நடத்த வேண்டும் என உதயநிதியின் வேண்டுகோளை ஏற்று தமிழகத்தில் இன்று மும்முறமாக கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரையில் தெற்கு மாவட்டத்தில் நான்கு தொகுதிகளில் நிச்சயமாக நான்கு தொகுதிகளிலும் குறைந்தது 5 லட்சம் பேராவது இந்த மாவட்டத்தில் இருந்து இந்த கையெழுத்தை வாங்குவோம் அதன் அடிப்படையில் இன்று தேவாலயங்கள், மற்றும் மசூதிகள் கோவில்கள் அனைத்திற்கும் சென்று இது போன்ற நடவடிக்கைகளை இளைஞர் அணி மட்டுமல்லாமல் எல்லா அணிகளும் ஒருங்கிணைந்து இன்று அதை செயல்படுத்திக் கொண்டுள்ளோம்.
திமுக மட்டும் இன்றி அனைத்து தோழமைக் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம், நிச்சயமாக தமிழக முதலமைச்சரின் முயற்சியும் உதயநிதி அவர்களின் முயற்சியும் தமிழகத்தில் வெற்றி பெறும் மத்தியில இருப்பவர்கள் இப்போது செய்யா விட்டாலும் 2024ல் ஏற்படக்கூடிய ஆட்சி மாற்றத்தில் நிச்சயமாக தமிழகத்தில் நீட்டை நுழைய விட மாட்டார் என்பது உறுதி, ஆரியம் திராவிடம் என்பது குறித்து பள்ளிக்கூட மாணவர்களுக்கு தெரியும் இது கூட பழனிச்சாமிக்கு தெரியவில்லை என்றால் ஆச்சரியமாக உள்ளது.
அவரது கட்சி பெயரில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் அண்ணாவையும் அவருக்கு தெரியவில்லை திராவிடமும் அவருக்கு தெரியவில்லை என்கிறது இதிலிருந்து தெரிகிறது இதற்கெல்லாம் சென்று ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லை, ஆறாவது ஏழாவது எட்டாவது புத்தகத்திலேயே ஆரியம் திராவிடம் பற்றி இருக்கிறது நமது சுதந்திர போராட்ட வீரர்கள் எல்லாம் பற்றி தெளிவாக கூறப்பட்டுள்ளது, இது தெரியாமல் எப்படி அவர் கட்சியில் உறுப்பினராக அல்ல பொதுச் செயலாளர் ஆகியுள்ளார் என்பது தெரியவில்லை.
இதை விட வெட்கக்கேடு வேறு ஒன்றும் இருக்க முடியாது, அதை நான் கண்டிக்கிறேன், இதற்கு படிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை படிக்காதவர்களுக்கு கூட ஆரிய திராவிடத்தை பற்றி தெரியும் தலைவர்களின் பேச்சைக் கேட்டு நாங்கள் திராவிட இயக்கத்தில் இணைந்தவர்கள், அவர் எப்படி இந்த இயக்கத்திற்கு வந்தார் என்று எங்களுக்கு தெரியவில்லை என எடப்பாடி பழனிச்சாமிக்கு கேள்வி எழுப்பினர் .