தனி இணையதளம் என்னாச்சு? கோர்ட் உத்தரவை சுட்டிக்காட்டி திமுகவை தட்டிக் கேட்ட விஜய்!
Author: Udayachandran RadhaKrishnan25 November 2024, 11:18 am
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், திமுக தனது எதிரி என முதல் மாநாட்டில் வெளிப்படையாகவே கூறினார்.
இதையடுத்து தொடர்ச்சியாக திமுக செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி விஜய் கண்டனம் தெரிவித்து வருகிறார். இந்தநிலையில் இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினத்தை முன்னிட்டு திமுகவை கடுமையாக சாடியுள்ளார்.
இது குறித்து விஜய் தனது X தளப்பதிவில், சர்வதேச அளவில் பெண்களின் முன்னேற்றம், முன்பை விட நம்பிக்கை அளிப்பதாக இருந்தாலும், அவர்களுக்கான பாதுகாப்பு இன்றும் கேள்விக்கு உரியதாகவே இருக்கிறது. பெண் விடுதலை பேசும் தமிழ்நாட்டில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் நாள்தோறும் நிகழ்வதாக வரும் செய்திகள் துயரம் அளிக்கின்றன.
இதையும் படியுங்க: காங்கிரஸ் பிரமுகரை வீடு புகுந்து தாக்கிய தவெகவினர் : கொலை மிரட்டல் விடுத்ததால் ஷாக்!
பெண்கள் மீதான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைத் தடுக்க, நீதித் துறையின் துணையோடு ஆட்சியாளர்கள் இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு, அரசு தனி இணையத்தளத்தை உருவாக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு யோசனை தெரிவித்துள்ளது.
இதற்கு மதிப்பளித்து, தமிழக அரசு தனி இணையத்தளத்தை உருவாக்கி, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினத்தில் வலியுறுத்துகிறேன்.