கார்த்திக் சிதம்பரம் டெபாசிட் கூட வாங்கி இருக்க முடியாது.. ஈவிகேஎஸ் இளங்கோவன் பாய்ச்சல்..!

Author: Vignesh
26 July 2024, 6:30 pm

காங்கிரஸ் கட்சியின் எம்பி ஆன கார்த்திக் சிதம்பரம் மக்களவை தேர்தலுக்கு முன்பு பிரதமர் மோடிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். இதற்கு கட்சிக்குள் கண்ட கடும் கண்டனம் எழுந்தது. இதனால், மக்களவைத் தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பளிக்கக்கூடாது என்று கட்சியில் எதிர்ப்பு கூரலும் எழுந்தது.

அந்த சமயத்தில், திமுக குறித்து அவர் தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையும் ஏற்படுத்தி இருந்தன. அதாவது, 2026 சட்டப்பேரவை இன் அமையும் அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெற வேண்டும் என்றும், கூட்டணியில் இருப்பதால் கூனிக்குறுகி இருக்கக்கூடாது மக்கள் பிரச்சனைக்கு குரல் கொடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

மேலும், ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக நடத்தப்பட்ட என்கவுண்டர் குறித்தும் அவர் கூறிய கருத்து சர்ச்சையில் ஏற்படுத்தியது. உண்மையை மறைக்கவே இந்த என்கவுண்டர் நடத்தப்பட்டதா என்ற சந்தேகம் எழுகிறது என அரசுக்கு எதிராக கார்த்திக் சிதம்பரம் கருத்து கூறியிருந்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கார்த்திக் சிலம்பரத்தை சரமாரியாக பேசி உள்ளார். இது தொடர்பாக தனியார் ஊடகத்திற்கு பேட்டி அளித்த அவர் அக்கட்சியின் கார்த்திக் சிதம்பரத்தின் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

அதில், திமுக தயவால் தான் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது என்றும், கார்த்திக் சிதம்பரம் கட்சிக்கும் நாட்டிற்கும் துரோகம் செய்கிறார் என்றும் சாடியுள்ளார். மேலும், காங்கிரஸ் கட்சி யாரையும் சார்ந்து இருக்கக் கூடாது என தேர்தலுக்கு முன்பே கார்த்திக் சிதம்பரம் கூறியிருக்கலாமே என்ற ஈவிகேஎஸ் இளங்கோவன் கார்த்திக் சிதம்பரம் சுயநலத்துடன் பேசி வருகிறார் என்று தெரிவித்துள்ளார். மேலும், திமுக வேலை செய்யாவிட்டால் கார்த்திக் சிதம்பரம் டெபாசிட் கூட பெற்று இருக்க முடியாது என்றும், கட்சி நலனை விட தேசத்தின் நலனே முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…