முதல்முறையாக சட்டமன்றம் வந்த ஈவிகேஎஸ்… வந்த வேகத்திலேயே மீண்டும் வீடு திரும்பியதால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
12 April 2023, 10:29 am

சமீபத்தில் நடந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கி வெற்றி கண்டார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.

பின்னர் அவர் சட்டமன்றம் வருவார் என எதிர்பார்த்த நிலையில் இருதய நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

இந்த நிலையில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அண்மையில் வீடு திரும்பிய நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று சட்டமன்றம் வருகை வந்தார்.
கொரோனா, இருதய தொற்றால் ஐசியூவில் 15 நாட்களுக்கு மேல் இளங்கோவன் சிகிச்சை பெற்று வந்தார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ இளங்கோவன் முதன்முறையாக வெற்றி பெற்ற பிறகு இன்று சட்டமன்றம் வருகை புரிந்தார்.வருகை பதிவேட்டில் கையெழுத்து விட்டு வீட்டிற்கு புறப்பட்டார்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 415

    0

    0