அரசு பேருந்தில் பெண் காவலரிடம் முன்னாள் ராணுவ வீரர் சில்மிஷம்… தனியாக போராடி சிறையில் அடைக்க துணிந்த சிங்கப்பெண்!!

Author: Babu Lakshmanan
13 April 2023, 10:28 am

அரசு பேருந்தில் பெண் காவலரிடம் அத்துமீறிய முன்னாள் ராணுவ வீரரை தனி ஆளாகப் போராடி சிறையில் அடைக்க துணிந்த சிங்கப்பெண்ணின் முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பணியாற்றும் பெண் காவலர் ஒருவர் நேற்று பணி நிமிர்த்தமாக கோவை சென்று விட்டு குன்னூர் திரும்பிய வழியில் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தில் ஏறியுள்ளார். அதே பேருந்தில் பின் இருக்கையில் அமர்ந்து வந்த கோத்தகிரி அஜூர் பகுதியைச் சேர்ந்த ராஜ் என்பவரது மகன் தர்மன் (56) எனும் முன்னாள் ராணுவ வீரர். இவர் பின் இருக்கையில் இருந்து கொண்டே பெண் காவலரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

முதலில் தட்டிக் கழித்த பெண் காவலர் கடுப்பாகவே தர்மனை தாக்கியுள்ளார். அதற்கு தர்மன் அந்த பெண் காவலரை திருப்பித் தாக்கியுள்ளார். பேருந்தில் இருந்தவர்கள் தர்மனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது, “எனக்கு எஸ்பிஐ தெரியும்… டிஎஸ்பி தெரியும்.. என்றெல்லாம் வாரி விட்டுள்ளார். இதனை கேட்டு பேருந்து பயணிகள் ஒரு வேலை நிஜமாக இருக்குமோ, என்று பின்வாங்கியுள்ளனர்.

பின்பு, பேருந்து நடத்துனர் மற்றும் தர்மன் ஒரே சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் காட்டேரி பகுதியில் தர்மனை காப்பாற்றுவதாக கருதி இறக்கி விட்டுள்ளார். பெண் காவலரை காட்டேரியில் இறங்க வேண்டாம் என்றும் நடத்துனர் கூறியுள்ளார். சிங்கப்பெண் பெண் காவலர் அவரும் பின் தொடர்ந்து காட்டேரியில் இறங்கியுள்ளார்.

தர்மன் தப்பியோட இனியொரு பேருந்தில் ஏறிய போது, அந்த காவலரும் அதே பேருந்தில் ஏறி, குன்னூர் லெவல் கிராஸ் பகுதியில் பேருந்தை நிறுத்தி சக காவலர் உதவியுடன் தர்மனை இறக்கி குன்னூர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

விசாரணையில் தர்மன் பெண் காவலரிடம் அத்துமீறியது உறுதியானதை தொடர்ந்து, காவலரிடம் புகாரை பெற்றுக் கொண்டு குன்னூர் இன்ஸ்பெக்டர் சதீஷ், சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் மற்றும் காவல்துறையினர் தர்மனை கைது செய்து மருத்துவ பரிசோதனைக்கு பின் குன்னூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். நாட்டை காப்பாற்ற வேண்டிய ராணுவத்தில் பணியாற்றிய ஒருவர் இப்படி தரக்குறைவாக நடந்தது வேதனை அளிப்பதாக தெரிகிறது.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!