முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் : கோவையில் அதிமுகவினர் உற்சாக கொண்டாட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 February 2023, 12:56 pm

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் இன்று பல்வேறு இடங்களில் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்தும் அவரது புகைப்படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் கோவை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

கோவை அண்ணா சிலை பகுதியில் உள்ள ஜெயலலிதா, எம்ஜிஆர், அண்ணாவின் சிலைக்கு மலர் மாலை அணிவித்து அதிமுகவினர் மரியாதை செலுத்தினர்.

பின்னர் இதய தெய்வம் மாளிகையில் அவரது புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

கோவை முன்னாள் மேயர் சேம.வேலுச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கோவை மாநகர் மாவட்ட அதிமுகவினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

  • Captain Vijayakanth first death anniversaryகேப்டன் விஜயகாந்த் நினைவு நாள்…கண் கலங்கிய சினிமா பிரபலங்கள்..!
  • Views: - 441

    0

    0