“தமிழக அரசின் சிஸ்டம் தோல்வியடைந்துவிட்டது”-முன்னாள் அமைச்சர் காட்டம்!

Author:
24 June 2024, 12:58 pm
Quick Share

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச் சாராயம் அருந்தி இறந்தவர்கள் தொடர்பாக பல்வேறு கட்சியினர் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும், தற்போதைய விராலிமலை தொகுதியின் எம்எல்ஏவுமான விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் தெரிவித்ததாவது,

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் செயல் இழந்துவிட்டது,இது தமிழக அரசின் சிஸ்டம் தோல்வி அடைந்ததை எடுத்துக்காட்டுகிறது,சம்பவ தினத்தன்று அந்த அரசு மருத்துவமனையில் நிலவிய மருந்து தட்டுப்பாட்டை தான் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சுட்டிக்காட்டினார். அவர் சொன்னதில் எந்த தவறும் இல்லை. இந்த விவகாரத்தில் வீண் விவாதம் செய்வதை நிறுத்தி விட்டு ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் திமுக வினர் ஈடுபட வேண்டும்.

மெத்தனாலை ஏன் இந்த அரசு கட்டுப்படுத்த தவறியது?விற்பனை செய்தவருக்கு மெத்தனால் எங்கிருந்து வந்தது? யார் மூலம் வந்தது? என்பதை விசாரிக்க வேண்டும். இந்த சம்பத்தில் முழுமையாக ஈடுபட்டவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும்.காவல்துறையும் இதில் உடந்தையாக இருந்திருக்கலாம் என்பதால் தான் கள்ளக்குறிச்சியின் எஸ்.பி சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.
இந்த அரசுக்கு மடியில் கனமில்லை என்றால் அவர்களாகவே முன்வந்து இச்சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும்.

அதைத்தான் நீதிமன்றத்திலும் கூறியுள்ளோம்.மரக்காணம் விவகாரத்திலும் சிபிசிடி விசாரணை என்னாச்சு?இந்த கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு பொறுப்பேற்று திமுக அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்று முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டியளித்தார்.

Views: - 124

0

0

Leave a Reply