ரூ.6,500 கோடி மறைமுக தேர்தல் நிதி… பிரதமர் மோடி மீது திண்டுக்கல் சீனிவாசன் குற்றச்சாட்டு..!!

Author: Babu Lakshmanan
29 March 2024, 8:05 pm

பிரதமர் மோடி தேர்தல் நிதி என்று 6500 கோடி ரூபாய் மறைமுகமாக பெற்றுள்ளதாக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றம் சாட்டினார்.

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பழனி சட்டமன்ற தொகுதியில் இன்று அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், திண்டுக்கல் சீனிவாசன், அதிமுக கூட்டணி எஸ்டிபி மாநில தலைவர் முகமது முபாரக் கலந்து கொண்டனர்.

முன்னதாக, அதிமுக தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், பேசிய முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் :- எங்கு சென்றாலும் ஸ்டாலினும், அவரது மகன் உதயநிதியும் பொய்யையே மூலதனமாக வைத்துக் கொண்டு பேசி வருகிறார்கள். திராவிட மாடல் ஆட்சி என்று கூறி திராவிட கட்சிகளின் சித்தாந்தத்தை கேவலப்படுத்தி வருகிறார்கள், எனக் கூறினார்.

அதனை தொடர்ந்து, பேசிய திண்டுக்கல் சீனிவாசன், பிரதமர் மோடி தேர்தல் நிதி என்று 6500 கோடி ரூபாய் மறைமுகமாக பெற்றுள்ளதாக குற்றம் சாட்டினார்.

இதனை தொடர்ந்து, எஸ்டிபி மாநில தலைவர் நெல்லை முபாரக் பேச வந்த போது, எம்ஜிஆரின் பாடலான ஆயிரம் கைகள் மறைந்து நின்றாலும், ஆதவன் மறைவதில்லை என்ற பாடலை பாடினார்.

தொடர்ந்து பேசிய நெல்லை முபாரக், பழனி அடிவாரம் முருகன் கோவில் கிரிவலப் பாதைகளில் நீதிமன்ற உத்தரவு என்ற பெயரில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வியாபாரிகள் சிறு குறு வியாபாரிகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், தங்களது வாழ்வாதாரத்தை இழந்து இருப்பதாகவும், இதனை நான் வெற்றி பெற்றால் சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வியாபாரிகளுக்கான உரிமைகளை மீட்டெடுப்பேன் எனவும் பேசினார்.

பின்னர் சின்ன பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை மேற்கொண்ட நெல்லை முபாரக், பின்னர் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், திண்டுக்கல் சீனிவாசன் உடன் இணைந்து தொழுகை மேற்கொண்டு இஸ்லாமியர்களிடம் இரட்டை இலைக்கு தீவிர வாக்கு சேகரிப்பு ஈடுபட்டனர். இதில், முன்னாள் எம்பி குமாரசாமி ,முன்னாள் எம்எல்ஏக்கள் வேணுகோபாலு ,குப்புசாமி , நகரச் செயலாளர் முருகானந்தம் ,எம் ஜி ஆர் மன்ற மாநில இணை செயலாளர் ரவி மனோகரன்,ஒன்றிய செயலாளர்கள் நிர்வாகிகள் என ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

  • Famous actor who physically assaulted Aishwarya Rai ஷாருக்கானுடன் தொடர்பு.. ஐஸ்வர்யா ராயை உடல் ரீதியாக தாக்கிய பிரபல நடிகர்..!!