கலைஞர் குடும்பத்திற்கு இனி வாரிசே வேண்டாம்… இதுதான் திமுகவினரின் நினைப்பு; அமைச்சர் கேஎன் நேரு கருத்துக்கு செல்லூர் ராஜு கிண்டல்

Author: Babu Lakshmanan
19 December 2022, 5:12 pm

மதுரை ; முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குடும்பத்தில் வாரிசே பிறக்கக்கூடாது என்று தி.மு.க.,வினரே நினைப்பார்கள் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம் செய்துள்ளார்.

சென்னை செல்வதற்காக மதுரை விமானநிலையம் வந்த முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ செய்தியாளரிடம் பேசியதாவது :- தி.மு.க. ஆட்சியில் கூட்டுறவுத்துறையை செம்மைப்படுத்த வேண்டும். ஒழுங்கான பொருட்கள் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுகிறது. பொருட்கள் விநியோகம் செய்வதிலும் சிக்கல் ஏற்படுகிறது. ஆனால் எங்கள் ஆட்சியில் தரமான பொருட்களை, முறையாக விநியோகம் செய்துள்ளோம்.

அதே போல், மூத்த குடிமக்கள் பொருட்கள் வாங்குவதிலும் சிரமம் ஏற்படுகிறது. கைரேகை பதிவதில் தாமதம் ஏற்படுவதால் பொருட்கள் பிறகு தருவதாகக் கூறி திருப்பி அனுப்பி விடுகின்றனர். தி.மு.க., அரசு சொன்ன திட்டங்களை நடைமுறைப்படுத்தவில்லை. தமிழர்களின் விழாவான பொங்கல் விழாவிற்கு அவர்கள் சொன்னது போலவே, 5 ஆயிரம் வழங்க வேண்டும்.

ஆதார் கார்டை இணைத்தவர்களுக்கு மட்டும் தான் பொங்கல் பரிசு என்று சொல்லாமல் எல்லோருக்கும் பொங்கல் தொகுப்பை வழங்க வேண்டும். அதற்கு பின்னர் இந்த திட்டத்தை அமல்படுத்த வேண்டும், என்றார்.

தமிழகத்தில் ஏற்படும் ரேஷன் அரிசிக் கடத்தல் குறித்த கேள்விக்கு பதிலளித்ததாவது :- ரேஷன் கடத்தலில் ஈடுபடும் நபர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். அப்போது தான் தடுக்க முடியும். அதே போல், கடத்தல் வண்டிகளை சீஸ் செய்ய வேண்டும். உணவுப் பொருட்கள் கடத்தல் திடீர் என்று நடக்கவில்லை. அது ஒரு சைக்கிளாக வேலை செய்கின்றனர். அவர்களை கண்டறிந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதே போல், போதைப் பொருட்கள் சப்ளையை தடுத்து நிறுத்தவேண்டும். சப்ளை செய்யும் நபர்களை மட்டும் பிடிக்காமல் அதற்கு ஆணி வேராக இருக்கும் நபர்களை கைது செய்து முழுமையாக போதைப் பொருட்களை ஒழிக்க வேண்டும், எனக் கூறினார்.

அமைச்சர் கே.என்.நேரு வாரிசு அரசியல் குறித்து பேசியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியதாவது :- மூத்த அமைச்சர் கே.என்.நேரு சொன்னது உண்மை. கலைஞர் குடும்பத்தில் இருந்து, யாரு வந்தாலும் ஆட்சிக் கட்டுக்கு வருவார்கள். மன்னர் பரம்பரையை தான் ஒழித்துள்ளோம். டாக்டர் கலைஞர் பரம்பரையை ஒழிக்க முடியவில்லை.

எனவே, இனி கட்சியில் கலைஞர் குடும்பத்தில் வாரிசு வரக்கூடாது என்று நினைப்பார்கள். வாரிசு வந்தால் அவர்கள் குடும்பம்தான் அமைச்சராவர்கள் என்று தெரியும். அதனால் அவ்வாறு நினைப்பார்கள். அதன் வெளிப்பாடுதான் அமைச்சர் கே.என்.நேரு சொல்லியுள்ளார். நகர்புற அமைச்சர் உண்மையை சொல்லும் நபர். உண்மையை தான் சொல்லியுள்ளார். இன்பநிதிக்கு குழந்தை பிறந்தாளும் கொடி பிடிப்பார்கள். அதனால் தலைவர் குடும்பத்தில் வாரிசு வேண்டாம் என நினைப்பார்கள். அதனை அமைச்சர் மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி அ.தி.மு.க., நிலை முனைப்பாக இருக்கோம், தொண்டர்களும் ஆர்வமாக உள்ளனர். எங்களுக்கு பொதுமக்கள் ஆதரவு கொடுக்கின்றனர். எங்கள் ஆட்சியை எண்ணிப்பார்க்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக தி.மு.க., எதுவும் செய்யவில்லை. பெண்கள் பாதுகாப்பின்மை, போதைப் பொருள் நடமாட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் இந்த ஆட்சியில் உள்ளது. தி.மு.க., அரசு செயலற்ற அரசாக உள்ளதால் நாங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவோம். எந்த கூட்டணி எங்களுடன் இருந்தாலும் நாங்கள் தான் வெற்றிபெருவோம், என்றார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 418

    0

    0