CM ஸ்டாலின் மக்களுக்காக டெல்லி போகல.. சென்னை மழையில் இருந்து பாடம் கற்க தமிழக அரசு தவறி விட்டது ; ஜெயக்குமார் விமர்சனம்..!!

Author: Babu Lakshmanan
19 December 2023, 12:58 pm

தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்த பிறகும், அந்தந்த மாவட்டங்களில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அரசு தவறிவிட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- தென் மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்த பின்னும் கடலோர மாவட்டங்களான கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக படகுகள் கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் அரசு அதனை செய்ய தவறிவிட்டது. சென்னை மழையில் இருந்து அரசு பாடம் கற்க தவறிவிட்டது, எனக் கூறினார்.

முதலமைச்சர் டெல்லி பயணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், மக்கள் மீது அக்கறை கொண்டு முதலமைச்சர் டெல்லி செல்லவில்லை எனவும், இண்டியா கூட்டணி கூட்டத்துக்கு செல்லும் வேளையில் போகிற போக்கில் பிரதமரை சந்திக்கிறார். முடிவு என்ன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும், என பதிலளித்தார்.

ஓ.பி.எஸ் அணி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், ஓ.பி.எஸ் தொண்டர்களால் நிராகரிக்கப்பட்டவர் எனவும், அவரை ஒரு பொருட்டாகவே நாங்கள் கருதவில்லை, என பதிலளித்தார்.

  • Anirudh updates on Vidamuyarchiஅனிருத் வெளியிட்ட “விடாமுயற்சி” மாஸ் அப்டேட்…அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!
  • Views: - 306

    0

    0