பச்சைப்பொய் பேசிய ரஜினி, கமல்… இதெல்லாம் நடக்கும் என தெரிந்தே உஷாரான அஜித், விஜய் ; முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்!

Author: Babu Lakshmanan
8 January 2024, 8:42 pm

கருணாநிதியின் நூற்றாண்டு விழாவில் நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோர் உண்மைக்கு மாறாக பேசியிருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்- அமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழா ‘ கலைஞர் 100’ என்ற பெயரில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கொண்டாடப்பட்டது. இந்த விழா கிண்டியில் உள்ள ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் திரையுலகைச் சேர்ந்த நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.

இந்த விழா குறித்து அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் தனது X வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறியதாவது :- புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் திரு.கருணாநிதி அவர்களால் தான் சினிமாவில் தொட முடியாத உயரம் சென்றதை போல முன்னணி நடிகர்கள் திரு.ரஜினிகாந்த் மற்றும் திரு.கமல்ஹாசன் ஆகியோர் நேற்று நடந்த விழாவில் உண்மைக்கு மாறாக பேசியுள்ளனர். இனிவரும் காலங்களில் வரலாற்றை மறைக்காமல் பேசினால் நன்று!

புரட்சித்தலைவர் தன் நடிப்பாலும் உழைப்பாலும் தன் வள்ளல் குணங்களாலும் மட்டுமே மக்கள் மனங்களை வென்று நிற்கிறார். ஆயிரமாண்டு கடந்தாலும் அவர் தான் ஆயிரத்தில் ஒருவர். அதை யாராலும் மாற்றவும் முடியாது! மறைக்கவும் முடியாது!

அவரது உதவியால் தான் கருணாநிதியே முதலமைச்சரானார். சினிமா துறையை சிறைப்பிடித்து ஸ்கிரிப்டில் உள்ளதை மட்டும் படிக்க சொல்லி கட்டளையிடாமல் மக்கள் பக்கம் திரும்புங்கள் முதல்வரே? இப்படி எல்லாம் நடக்கும் என தெரிந்தே இருபெரும் நடிகர்களான திரு.விஜய் மற்றும் திரு.அஜித் ஆகியோர் விழாவை புறக்கணித்துள்ளனர், என தெரிவித்துள்ளார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ