சமூக நீதி பேசும் திமுக… திருமாவளவனுக்காக ஏன் குரல் கொடுக்கல..? எல்லாமே திமுகவின் நாடகம் : ஜெயக்குமார் விமர்சனம்!!

Author: Babu Lakshmanan
5 September 2023, 6:37 pm

அமைச்சர் உதயநிதிக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்குவதற்காகவே, இதுபோன்ற கருத்தை திட்டமிட்டு வெளியிட்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

சுதந்திரப் போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழர் வஉசிதம்பரனார் 152வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை ராஜாஜி சாலையில் உள்ள துறைமுக வளாகத்தில், அவரது திருவுருவ சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார் இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் என் ஆர் சிவபதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ் ஆர் விஜயகுமார் டாக்டர் ஜெயவர்தன் வடசென்னை தெற்கு மேற்கு மாவட்ட கழக செயலாளர் பாலகங்கா உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது :- சுதந்திரப் போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழர் வஉ சிதம்பரனார் இன்றும் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். இந்து மதத்தினரை புண்படுத்தும் வகையில் பேசிய உதயநிதி கருத்து குறித்து மம்தா பானர்ஜி அவர்கள் கண்டனத்தை தெரிவிக்கிற வகையில் கருத்தைத் தெரிவித்து இருந்தார்கள். பலர் சனாதனம் குறித்து உதயநிதி கூறிய கருத்திற்கு கண்டனம் தெரிவித்து இருந்தார்கள்.

சத்யராஜ் ஒரு படத்தில் ரெண்டு பிரிவினர் அடித்துக் கொண்டால்தான் நாம் பிரச்சனை இல்லாமல் இருக்க முடியும் என்கின்ற வகையில், ஒரு திட்டமிட்டு நாட்டில் உள்ள பிரச்சனைகளை எல்லாம் கண்டுகொள்ளாமல், பல இடங்களில் பள்ளம் தோண்டி போட்டுவிட்டு, போக்குவரத்து நெரிசல் ஆக்கிவிட்டு, இந்த அளவிற்கு தமிழ்நாடு கொலை மாநிலமாக கொள்ளை மாநிலமாக இருக்கிறது.

வாழ்வதற்குரிய நிலைமையை இந்த அரசாங்கம் உறுதிப்படுத்தவில்லை. சட்ட ஒழுங்கு சந்து சிரிக்கின்ற வகையில், ஒரு நாடு சீர்கெட்டு மக்கள் பாதுகாப்பாக வாழ முடியாத சூழல் உள்ளது. ஒரு பக்கம் விலைவாசி உயர்வு, ஒரு பக்கம் மின் கட்டண உயர்வு, ஒரு பக்கம் வீட்டு வரி, சொத்து வரி, பால் விலை உயர்வு, விலைவாசியை கட்டுப்படுத்துவதற்கான எந்த நடவடிக்கையும் இல்லை.

மக்களை ஏமாற்ற வேண்டும், திசை திருப்ப வேண்டும். உழலை திசை திருப்ப சனாதனம் என்ற ஆயுதத்தை கையில் எடுத்து விமர்சனப் பொருளாய் ஆகியிருக்கிறது. 1947க்கு பிறகு சுதந்திரம் பெற்றதற்குப் பின்பு அரசியலமைப்பு சட்டத்தின்படி எல்லோருக்கும் எல்லா உரிமையும் வழங்கப்பட்டு எல்லா ஆட்சிகளிலும் மக்களுக்கு உரிமை வழங்கப்படுகிறது. ஆனால் திமுக ஆட்சியில் இது கிடையாது. அடிப்படை வசதிகளிலிருந்து மக்களுடைய சமூக நலத்திற்கான பல்வேறு திட்டங்கள் கொண்டு வந்து, இட ஒதுக்கீட்டில் ஒரு வரலாற்றை உருவாக்கி, ஆதிதிராவிடருக்கு உரிய அந்தஸ்தை வழங்கிய கட்சி அதிமுக.

சமதர்மம் பேசும் இவர் இந்திய கூட்டணியில் திருமாவளவனை ஒருங்கிணைப்பாளராக போட ஏன் முயற்சி எடுக்கவில்லை, அப்போ சம தர்மம் எங்கு போனது. உதயநிதிக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகம் தேவை. அவரது மகனுக்கு முழுவதுமாக பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக ஒரு மதத்தை இழிவுபடுத்தலாமா…?

மக்களை திசை திருப்பும் முயற்சியாகவும், மக்களை ஏமாற்ற முயற்சியாகவும் உதயநிதி செய்து வருகிறார். 2024 தேர்தலில் இது அனைத்தும் பிரதிபலிக்கும். இந்த ஆட்சிக்கு எதிரான அலை அதிமுகவின் அலை பெரிதாக இருக்கும். கிறிஸ்துவ மதமாக இருந்தாலும் இஸ்லாமியமாக இருந்தாலும் எந்த மதமாக இருந்தாலும் மதத்தை இழிவு படுத்துவதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

பொதுவாக ஆசிரியர்கள் மட்டுமில்லாமல் காவல்துறையும் இன்று அடி வாங்கும் நிலைமையில் தான் உள்ளது. ஆசிரியர்களில் அரசு ஊழியர்கள் வீதியில் இருந்து போராடுகிற நிலையில், ஆசிரியர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை.

ஒரு மதத்தை இழிவு படுத்தினால் அது யாராக இருந்தாலும் அது தண்டனைக்குரிய விஷயம். உதயநிதி மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மீறினதினால் பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும், என தெரிவித்தார்.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 366

    0

    0