மைக்கை பார்த்தாலே சிலருக்கு கோபம் வருது : அண்ணாமலையை மறைமுகமாக விமர்சித்த ஜெயக்குமார்!!

Author: Babu Lakshmanan
18 January 2023, 5:57 pm

சிலர் மைக்கை பார்த்தாலே கோபப்படுவதாக அண்ணாமலை குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

சென்னை மதுரவாயல் அடுத்த வானகரத்தில் அதிமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில் எடப்பாடி பழனிச்சாமி,முன்னாள் அமைச்சர்கள் ஜெயகுமார், பென்ஜமின் உட்பட பல அதிமுக பிரமுகர்கள் கலந்து கலந்துக்கொண்டனர்.

பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயகுமார் “ஆளுநர் விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதிர்ச்சியற்று செயல்படுவதாகவும், ஆளுநர் குறித்து திமுகவினர் ஒருமையில் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது எனவும் தெரிவித்தார்.

மேலும் கோபத்தை விடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் பண்போடு செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், சிலர் பத்திரிக்கையாளர்களின் மைக்கை கண்டாலே டென்ஷன் ஆவதாக பாஜக தலைவர் அண்ணாமலையை மறைமுகமாக விமர்சித்தார்.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என ஓபிஎஸ் தெரிவித்த கருத்து குறித்து செய்தியாளர் கேள்விக்கு பதில் அளித்த ஜெயகுமார், சசிகலா, தினகரன்,ஓபிஎஸ் ஒன்றுபட்டால் அவர்களுக்கு தான் வாழ்வு எனவும், தமிழக மக்களுக்கு எந்த வாழ்வும் இல்லை எனவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய ஜெயகுமார், பொதுக்குழுவால் நீக்கப்பட்ட சசிகலா, தினகரன், பன்னீர்செல்வம் ஆகியோருக்கு மூடப்பட்ட அதிமுக கதவுகள் மீண்டும் திறக்காதென திட்டவட்டமாக தெரிவித்தார். தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர் கெட்டு இருப்பதாக கூறிய அவர், இது பற்றி பேசுவதற்கு ஆளுநர் டெல்லி சென்றிருப்பதாகவும், ஆனால் திமுக கொடுத்த புகாரின் அடிப்படையிலேயே ஆளுநர் விசாரணைக்காக டெல்லி சென்றிருப்பதாக பொய்யான பிம்பத்தை திமுகவினர் ஏற்படுத்துவதாக சாடியுள்ளார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ