தூத்துக்குடியில் வடியாத வெள்ளம்.. காழ்ப்புணர்ச்சியால் கண்டு கொள்ளாத திமுக அரசு ; கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு!!
Author: Babu Lakshmanan28 டிசம்பர் 2023, 1:36 மணி
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட குடிமராமத்து பணியை தொடர்ந்து இருந்தால் இழப்பு ஏற்பட்டிருக்காது என ஓட்டப்பிடாரம் அருகே முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றம்சாட்டியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18 ஆகிய இரு தினங்கள் பெய்த கனமழையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை, வெள்ள நீர் புகுந்து வீடுகள் குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக வடக்கு மாவட்டம் சார்பில் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் ஆழிகுடி, முத்தாலங்குறிச்சி இந்திரா காலனி, காமராஜ் நகர் மாதாங்கோயில் தெரு, நாணல்காடு, கிராமத்தில் அதிமுக கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் அய்யா துரை பாண்டியன் ஏற்பாட்டில் 2000 பேருக்கு மழையால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, பருப்பு, ரஸ்க், பிஸ்கட் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, கனமழையால் சேதமடைந்த 5000 ஏக்கருக்கு மேல் நெல் பயிர் வெள்ளத்தில் அடித்து சென்றது. அதனை முன்னாள் அமைச்சர் கோவில் பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதில் ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன், கருங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் லட்சுமண பெருமாள், மாவட்ட கவுன்சிலர் பேச்சியம்மாள், நகர மன்ற உறுப்பினர் கவியரசன், கலை இலக்கியப் பிரிவு மாவட்ட செயலாளர் போடு சாமி, அம்மா பேரவை மாவட்ட இணை செயலாளர் நீலகண்டன், தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவன தலைவர் வேயில்முத்து பாண்டியன், உள்ளிட்டோர் உடன் இருந்தனர்,
பின்னர் கடம்பூர் ராஜூ செய்தியாளரிடம் கூறியதாவது ;- மிக அதிகமாக கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு மேல் இல்லாத வகையில் ஒரே நாளில் பெய்த மழையால் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பாதித்தது. குறிப்பாக, தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், ஏரல், சாத்தான்குளம் அதிக அளவில் பாதிக்கப்பட்டது. இதுவரை இன்னும் பல்வேறு இடங்களில் மழைநீர் வடியவில்லை.
ஆனால், இதை திமுக அரசு கண்டு கொள்ளவில்லை. ஆனால், முன்னாள் முதல்வர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேரடியாக களத்துக்கு வந்து மக்களோடு நின்றார். மக்கள் களத்தில் இருந்து நேரடியாக சந்தித்து உங்களின் சார்பாக அறிவுரை எடுத்துச் சொன்னார்கள். மக்கள் களத்தில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள். இன்னைக்கு மக்கள் கொந்தளிப்பில் இருக்கிறார்கள். அறிவிக்கப்பட்ட நிவாரணம் என்பது ரூ.6000 அறிவிக்கப்பட்டிருந்தது, இது போதாது.
கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் முதல் எடப்பாடி பழனிச்சாமி குடிமராமத்து பணி என்ற அற்புதமான திட்டத்தை கொண்டு வந்து குளங்கள் தூர்வாரப்பட்டது. ஆனால், தற்போது இந்த திமுக ஆட்சி காழ்ப்புணர்ச்சி காரணமாக கிடப்பில் போட்டுள்ளனர்.
இந்த பேரழிவு நடந்திருக்கிறது. முறையாக குளங்களை தூர்வாரி இருந்தால் இந்த இழப்பு சந்திக்க தேவையில்லை.
மாநிலத்தில் உள்ள திமுக ஆட்சி கண்டும் காணாமல் இருப்பது போல் இல்லாமல், மத்திய அரசு இந்த மக்களை காப்பத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
0
0