மூடப்பட்டது மேட்டூர் அணை… CM ஸ்டாலின் தான் காரணம் ; விவசாயிகளை வஞ்சிக்கும் திமுக அரசு : முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு!

Author: Babu Lakshmanan
1 November 2023, 5:35 pm
Quick Share

மத்திய அரசு அறிவித்த பயிர் இழப்பீடு தொகையை வழங்காமல் தமிழக அரசு விவசாயிகளை வஞ்சிக்கிறது என கூத்தாநல்லூர் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கூதத்தாநல்லூர் நகரத்தில் 10 வார்டுகளுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில், வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மகளிர் அணி, இளைஞர் இளம்பெண் பாசறை, பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் முன்னாள் உணவுத்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட கழக செயலாளரும், நன்னிலம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான . கழக அமைப்புச் செயலாளர் ஆர்.காமராஜ் தலைமையில் நடைபெற்றது.

அப்போது முன்னாள் அமைச்சர் காமராஜ் பேசியதாவது :- இந்த இயக்கம் 51 ஆண்டுகளை கடந்து 52வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. விவசாயிகள் கஷ்டபடுகிறார்கள். மேட்டூர் அணை மூடபட்டுவிட்டது. இந்த நிலைக்கு திமுக முதலமைச்சர் முக.ஸ்டாலின்தான் காரணம். மத்திய அரசு பயிர் இழப்பீட்டு ஹெக்டேருக்கு ரூ.13.500 தொகையை ரூ.17 ஆயிரமாக உயர்த்தி உத்தரவிட்டது. ஆனால், தற்போதுள்ள தமிழக அரசு உத்தரவை மாற்றவில்லை. விவசாயிகளை வஞ்சிக்கிறது, என பேசினார்.

இதில், ஒவ்வொரு பூத்களிலும் 69 பேர் நியமிக்கபட்டு அதற்கான விண்ணப்ப படிவத்தினை முன்னாள் அமைச்சர் காமராஜிடம் வழங்கினர். இதில் கழக கொள்கை பரப்புச் துணை செயலாளரும், திருவாரூர் மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளருமான இளவரசன், நகரசெயலாளர் ராஜசேகர் மற்றும் கூத்தாநல்லர் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் தொண்டர்கள் 60க்கும் மேற்பட்டோர் திமுகவிலிருந்து விலகி முன்னாள் அமைச்சர் காமராஜ் முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர்.

  • snehan recent news சம்பவம் செய்த சினேகன்…திகைத்து போன கன்னிகா..!என்னவா இருக்கும் ?
  • Views: - 270

    0

    0