திமுகவை போல ஆட்சிக்கு வருகின்றபோது ஆடுவதும் ஆட்சி இல்லாத போது ஓடுவதுமாக இருக்கிற இயக்கமாக அதிமுக கிடையாது என மன்னார்குடியில் அதிமுக பொதுகூட்டத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு மன்னார்குடி சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் பந்தலடியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது . இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் பேசியதாவது :- அதிமுகவுக்கு இருக்கின்ற வரலாற்றை போல உலகில் வேறு எந்த கட்சிக்கும் இவ்வளவு பெரிய வரலாறு இருக்க முடியாது. அண்ணா திமுகவில் இரண்டு கோடி உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.
இதை எங்களால் உறுதி செய்ய முடியும். ஏனென்றால் உறுப்பினர்களை சேர்த்தவர்கள் நாங்கள். அதிமுகவில் உறுப்பினர்கள் தானாகவே வந்து சேர்கிறார்கள். அதிமுக நீடித்து நிலைத்து இருக்கிறது. எப்பொழுது எடப்பாடியார் மீண்டும் ஆட்சிக்கு வருவார். கல்யாணத்திற்கு சென்றாலும் காதணிவிழாவிற்கு சென்றாலும், இதே பேச்சாக தான் இருக்கிறது. அடுத்தது அதிமுக தான் ஆட்சி என திமுக ஆட்சிக்கு வந்த உடனே பொதுமக்கள் பேசிகின்றனர்.
அரசு ஊழியர்கள் , ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வு திட்டத்தை தருகிறோம் என தேர்தல் வாக்குறுதிகளை திமுக கூறியது அதை திமுகவால் நிறைவேற்ற முடியவில்லை. ஆனால் பக்கத்து மாநிலங்களில் பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அறிவித்து விட்டார்கள்.
அடிதட்டு மக்களை கை தூக்கி விட்ட தலைவி புரட்சித்தலைவி அம்மா ஜெயலலிதாவை போல் தமிழகத்திற்கு திட்டத்தை கொடுத்தவர்கள் யார் இருக்கிறார்கள். பெண்களுக்கு ரோல் மாடல் என்றால் புரட்சித் தலைவி அம்மா. உலகத்தில் எந்த மூலையில் பெண்களுக்கு பிரச்சனை என்றாலும் முதல் குரலை கொடுக்கக் கூடிய தலைவி புரட்சித்தலைவி அம்மா. அதிமுக ஆண்ட பத்து ஆண்டுகளில் மொத்தமே ரூ 3 1/2 லட்சம் கோடி கடன் வாங்கி மக்களுக்கு திட்டங்களை நிறைவேற்றினோம்.
ஆனால் திமுகவோ ஆட்சிக்கு வந்த 32 மாதங்களிலே ரூ 3. 1/2 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது. ஆனால் மக்களுக்கு எந்த திட்டமும் செய்யவில்லை. சட்டமன்றத்தில் கேள்வி கேட்டால் திட்டங்களை மக்களுக்கு செய்து விட்டோம் என கூறுகிறார்கள். திமுகவை போல ஆட்சிக்கு வருகின்றபோது ஆடுவதும், ஆட்சி இல்லாத போது ஓடுவதுமாக இருக்கிற இயக்கமாக அதிமுக கிடையாது. எல்லா காலத்திலும் ஒரே மாதிரியான நிலையான இயக்கம் அதிமுக கழகம், என்று கூறினார் .
அதனைத் தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த பொதுக்கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் சிவா.ராஜமாணிக்கம் , நகரச் செயலாளர் ஆர்.ஜி.குமார் . ஒன்றிய செயலாளர்கள் தமிழ்ச்செல்வன் , தமிழ் கண்ணன் , மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பொன்வாசுகிராம் உள்ளிட்ட இளம்பெண் , இளம்பாசறை , தொழில்நுட்ப அணியினர் உள்ளிட்ட நகர , ஒன்றிய கழக நிர்வாகிகள் இருந்தனர்.
சுந்தர் சி கதையை உடனே ஓகே செய்த நடிகர் கார்த்தி சுந்தர் சி தமிழ் திரைப்பட உலகில் முன்னணி இயக்குனராக…
நண்பர் ஸ்ரீனிவாசா ராவின் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டு! பிரபல இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி மீது அவரது நீண்டகால நண்பர் எனக்கூறும் திரைப்படத்…
தஞ்சையில், நெருங்கிப் பழகி தனிமையில் இருந்ததால் உருவான கருவைக் கலைக்கச் சொல்லி கொலை மிரட்டல் விடுத்த ஜிம் உரிமையாளர் கைது…
அடித்து சொல்லும் சந்தீப் கிஷன் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படம் 2025 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும்…
அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் நாளில், கையெழுத்து இயக்கத்தை நடத்த உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். திருப்பூர்:…
நடிகர் மாதவனின் புதிய செயலி நடிகர் மாதவன் பங்குதாரராக இருக்கும் ‘Parent Army (Parent Geenee)’ செயலி சென்னையில் உள்ள…
This website uses cookies.