ஓபிஎஸ்-க்கு இது நல்லதல்ல… அடுத்த சட்டசபை கூட்டத்தொடரில் முடிவு வரும் : எச்சரிக்கும் மாஃபா பாண்டியராஜன்!!

Author: Babu Lakshmanan
30 March 2023, 12:55 pm

தமிழக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் விவகாரத்தில் ஓ பன்னீர்செல்வத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் அவர் திமுகவின் பி டீம் என்ற அடையாளம் அவருக்கு கிடைத்து இருப்பது அவருக்கு நல்லதல்ல என்று முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :- மத்திய அரசின் தேசிய நதிநீர் ஆணையம் கூட்டத்தில் பம்பா அச்சங்கோவில் நதிநீர் இணைப்பு திட்டம் குறித்து பேசப்பட்டது. இந்த திட்டத்தை மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களால் முன்னெடுக்கப்பட்டது. மேலும், இந்த திட்டத்தை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களில் ஒன்றாக இந்த திட்டத்தை தேசிய நதிநீர் ஆணையம் எடுத்துக்கொண்டது. ஆனால், இந்த திட்டத்தை எதிர்த்து கேரளா சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

மேலும், பம்பா அச்சங்கோவில் நதிநீர் இணைப்பு திட்டம் குறித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கேரளா அரசுக்கு அழுத்தம் கொடுத்து வந்தார். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக திமுக அரசு கிடப்பில் போட்டு உள்ளது.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள் பட்டியலில் இருந்து இந்த திட்டத்தை வெளியில் எடுக்க வாய்ப்பு உள்ளது. இதை தமிழக அரசு தடுக்க வேண்டும். மேலும், இந்த பம்பா அச்சங்கோவில் நதிநீர் இணைப்பு திட்டம் மூலம் விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 1.75 லட்சம் ஹக்டர் பாசன வசதி பெறும். இந்தத் திட்டத்தை செயல்படுத்த மக்கள் இயக்கமாக உருவாக்க வேண்டும். இந்த திட்டத்தை செயல்படுத்த இரண்டு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

இரு மாநிலம் சார்ந்த திட்டங்களை செயல்படுத்தும் போது இரு மாநில அரசுகளிடையே ஒரு அரசியலில் இணக்கம் இருக்க வேண்டும். இந்த திட்டத்தை செயல்படுத்த ஒவ்வொரு தளத்திலும் முயற்சி எடுக்க வேண்டும். பம்பா அச்சங்கோவில் நதிநீர் இணைப்பில் அரசியல் ரீதியான முன்னெடுப்பு அவசியம்.

OPS - Updatenews360

தமிழக எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் சட்டப்படி நடந்த கொள்ள வேண்டும். தமிழக எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருந்து தற்போது கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் அவருக்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பது தேவையற்றது. மேலும், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களால் தமிழக எதிர்க்கட்சித் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஆர் பி உதயகுமார் அவர்களுக்கு உரிய மரியாதையை சபாநாயகர் அளிக்க வேண்டும்.

தமிழக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் விவகாரத்தில் ஓ பன்னீர்செல்வத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் அவர் திமுகவின் பி டீம் என்ற அடையாளம் அவருக்கு கிடைத்து இருப்பது அவருக்கு நல்லதல்ல. மேலும், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் மோதல் போக்கை கைவிட வேண்டும். அடுத்த அமர்வில் தமிழக சட்டமன்ற சபாநாயகர் ஒரு நல்ல முடிவு எடுப்பார், என நம்புவதாக மாஃபா.பாண்டியராஜன் தெரிவித்தார்.

  • vaadivaasal movie shooting starts on august ஒரு வழியாக தொடங்கப்போகுது வாடிவாசல்? ஒரு படத்துக்கு இவ்வளவு இழுபறியா?