பொன்முடி வழக்கு தீர்ப்பால் அப்செட்… பிரதமர் மோடிக்கு எதிராக துண்டு பிரசுரங்களை விநியோகித்த விழுப்புரம் திமுகவினர்… !!

Author: Babu Lakshmanan
21 December 2023, 7:06 pm

பிரதமர் மோடிக்கு எதிராக 75 லட்சம் கோடி ஊழல் விரைவில் வெளி வர உள்ளதாக முன்னாள் அமைச்சர் பொன்முடியின் ஆதரவாளர்கள் துண்டு பிரசுரங்கள் விநியோகித்ததால் பரபரப்பு நிலவியது.

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்காக பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முன்னதாக, தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி ஏராளமான திமுக தொண்டர்கள் விழுப்புரம் புதுச்சேரி சாலையில் அமைந்துள்ள திமுக கட்சி அலுவலகத்தில் கட்சியினர் திரண்டு இருந்தனர்.

பின்னர் தீர்ப்பளிக்கும் நேரத்தில் விழுப்புரம் நகரத்தில் பல இடங்களில் அரை மணி நேரமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பின்னர் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டு தண்டனையை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன் தீர்ப்பு அளித்தார். மேல் முறையீடு செய்வதற்காக தண்டனை 30 நாட்கள் நிறுத்தி வைக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார்.

இதனையடுத்து திமுக அமைச்சர் பொன்முடியின் வீடு பூட்டப்பட்டுள்ளது. ஒரே ஒரு காவலர் மட்டும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். மேலும், விழுப்புரம் திமுக கட்சி அலுவலகத்தில் கட்சித் தொண்டர்கள் எப்போதும் கூட்டமாக காணப்படும். ஆனால் தற்போது வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும், திமுக கட்சியினர் பிரதமர் மோடிக்கு எதிராக 75 லட்சம் கோடி ஊழல் விரைவில் வெளி வர உள்ளதாக ஆங்கிலத்தில் துண்டு பிரசுரங்கள் வெளியிடப்பட்டது. இதனால் இங்கு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

  • Captain Vijayakanth first death anniversaryகேப்டன் விஜயகாந்த் நினைவு நாள்…கண் கலங்கிய சினிமா பிரபலங்கள்..!
  • Views: - 798

    0

    0