முதலமைச்சர் ஸ்டாலினுடன் முன்னாள் அமைச்சர் பொன்முடி திடீர் சந்திப்பு.. தழு தழுத்த குரலில் உருக்கமாக சொன்ன ஒரே ஒரு வார்த்தை!
Author: Udayachandran RadhaKrishnan22 December 2023, 12:55 pm
முதலமைச்சர் ஸ்டாலினடன் முன்னாள் அமைச்சர் பொன்முடி திடீர் சந்திப்பு.. தழு தழுத்த குரலில் உருக்கமாக சொன்ன ஒரே ஒரு வார்த்தை!
பொன்முடி, விசாலாட்சி உள்ளிட்டோருக்கான தண்டனை விவரங்கள் நேற்று அறிவிக்கப்பட்டன.பொன்முடி, மனைவி விசாலாட்சிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார்.
மேலும் இருவருக்கும் தலா ரூ50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன் பொன்முடி, விசாலாட்சியின் 3 ஆண்டு சிறை தண்டனையானது மேல்முறையீட்டுக்காக 1 மாதம் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் விழுப்புரம் நீதிமன்றத்தில் பொன்முடி, விசாலாட்சி இருவரும் சரணடைய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு தண்டனை கிடைத்துவிட்டது என்பதால் அவர் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் அமைச்சர், எம்.எல்.ஏ. பதவியை இழந்துவிட்டார். 3 ஆண்டு சிறை தண்டனைக்குப் பின்னர் 6 ஆண்டுகள் தேர்தலிலும் பொன்முடியால் போட்டியிட முடியாது.
இதனையடுத்து பொன்முடி வசம் இருந்த உயர் கல்வித்துறை, கூடுதல் பொறுப்பாக அமைச்சர் ராஜகண்ணப்பன் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை பொன்முடி சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது சென்னை உயர்நீதிமன்றத்தின் சிறை தண்டனை தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் பொன்முடி விவரித்ததாக தெரிகிறது.