அவங்களுக்கு வந்தால் ரத்தம்… எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா…? கெஜ்ரிவால் கைது குறித்து ராஜேந்திர பாலாஜி கொடுத்த பஞ்ச்…!!!

Author: Babu Lakshmanan
23 March 2024, 2:44 pm

திமுக கடந்த சட்டமன்றத் தேர்தலில் விடப்பட்ட தேர்தல் அறிக்கையின் ஜெராக்ஸ் தான் தற்போதை நாடாளுமன்ற தேர்தலில் அறிக்கை என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சனம் செய்துள்ளார்.

சென்னையிலிருந்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மதுரை விமான நிலையம் வருகை தந்தார் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கொள்கையில்;- அதிமுக கூட்டணியில் விருதுநகர் தேமுதிக வேட்பாளர் விஜய் பிரபாகரன் வெற்றி பெறுவார்.

மோடி எங்கள் டாடி என கூறினீர்கள், இப்போது நிலை என்ன என செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் பதிலளித்ததாவது :- அதிமுகவுக்கும், திமுகவுக்கும் தான் போட்டி, விருதுநகரில் அதிமுக கூட்டணி வேட்பாளரும் திமுக கூட்டணி வேட்பாளர் போட்டியிடுகிறார். விருதுநகரில் விஜயகாந்துக்கு நல்ல மரியாதை, செல்வாக்கு உள்ளது. கருப்பு எம்ஜிஆர் என்ற பெயரும் பெற்றுள்ளார். எதிர் நிறுத்தக்கூடிய வேட்பாளர்கள் பலம், பலவீனம் என்ன என்பதெல்லாம் பார்ப்பதில்லை. அண்ணா திமுக வேட்பாளர்கள் சுழன்று பணியாற்றுவார்.

விருதுநகர், ராமநாதபுரம் தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். இந்த ஆட்சியில் வீட்டு வரி, சொத்து வரி, மின்சார கட்டணம் உயர்ந்துள்ளது. எந்த சாதனைகளை கூறி திமுக ஓட்டு கேட்கும். அதிமுக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் முல்லை, காவேரி உள்ளிட்ட நதி பிரச்சினைகள் தீர்க்கப்படும். திமுக கடந்த சட்டமன்றத் தேர்தலில் விடப்பட்ட தேர்தல் அறிக்கையின் ஜெராக்ஸ் தான் தற்போதை நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை. தேர்தல் வந்துவிட்டால் எதிரில் நிற்பவர்கள் யார் என்று கூட பார்க்க மாட்டார்கள். தொண்டர்கள் சுழன்று பணியாற்றுவார்கள், எனக் கூறினார்.

மக்களவைத் தேர்தல் நேரத்தில் டெல்லி முதலமைச்சர் கைது குறித்த கேள்விக்கு, “தேர்தல் நேரத்தில் கொலை நடந்தால் குற்றவாளியை கைது செய்யக்கூடாதா..? நீதிமன்றம் தான் கூற வேண்டும். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடத்தப்படும் விசாரணை சரிதானா.? எனக் கேட்டதற்கு, அரவிந்த் கெஜ்ரிவால் கைது சரிதான் என கூறவில்லையே. நீதிமன்றம் தான் முடிவெடுக்கும். விஜய் பாஸ்கர் வீட்டில் எதுவும் இல்லை என அவரது தந்தை கூறியிருக்கிறார். அவர்களுக்கு வந்தால் ரத்தம் எங்களுக்கு வந்தால் தக்காளியா.. என்றார்.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?