கடுமையான விலைவாசி உயர்வால் தமிழகம் தத்தளித்து வரும் நிலையில், மதுவை அதிகரிக்க, பற்றாக்குறை போக்க ஆய்வு நடத்துவது தான் நாட்டுக்கு முக்கியமா…? என சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது :- கடுமையான விலைவாசி உயர்வால் தமிழகம் தத்தளிக்கிறது. தக்காளி உட்பட காய்கறி, மளிகை பொருட்கள் விலை கிடுகிடுவென உயர்ந்து விட்டது.
சமையலிலே மிக முக்கியமான பொருட்கள் வெங்காயம், தக்காளி ஆகும். இந்த இரண்டும் இல்லாமல் எந்த சமையலும் இல்லத்தரசிகளால் சமையல் செய்ய முடியாது. மற்ற காய்கறிகளை வைத்து சமைக்கலாம் என்று பார்த்தால் எல்லா காய்கறிகளும் சொல்லி வைத்தார் போல உயர்ந்து இருக்கிறது. பச்சை மிளகாய், இஞ்சி என்று தொடங்கி எந்த காய்கறிக்கு பக்கம் நாம் போனாலும், அதன் விலை எட்டாது தூரத்துக்கு உயர்ந்திருக்கிறது.
காய்கறி விலை தான் உயர்ந்தது என்று பார்த்தால் மளிகை பொருள் விலையையும் அரசு கட்டுப்படுத்தவில்லை. மளிகை பொருள் விலை கவலை அளிக்கிறது. ஆனால், திடீரென்று முதலமைச்சருக்கு ஞானோதயம் ஏற்பட்டு தக்காளிக்காக மட்டும் ஆய்வு செய்துள்ளார். ஆனால், எடப்பாடியார் முன்கூட்டியே விலைவாசி உயர்வை குறித்து அறிக்கை வாயிலாகவும், பேட்டி வாயிலாகவும் எடுத்துக்கூறி வருகிறார். ஆனால் அரசு தூங்கிக் கொண்டுதான் உள்ளது.
நாட்டில் மளிகை பொருட்கள் விலை உயர்வுக்கு ஆலோசனை செய்யவில்லை. ஆனால், என்ன அரசு ரொம்ப முக்கிய ஆய்வை மேற்கொண்டு எத்தகைய மதுவிற்கு வரவேற்பு பெற்றுள்ளது. எத்தகைய மது விற்பனையாக இருக்கிறது, எத்தகைய மது பற்றாக்குறை இருக்கிறது. சிங்கிளாக எப்படி மது அருந்த அருந்தலாம் என்ற ஆய்வில் உள்ளனர், இதுவா நாட்டுக்கு முக்கியம்.
இன்றைக்கு மின்கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு, குப்பை வரி உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு என மக்களின் பொருளாதார வாழ்வாதாரமே கேள்விக்குறியாக உள்ளது. தாங்க முடியாத விலைவாசி உயர்வால் மக்கள் தத்தளித்து வருகின்றார்கள். ஆயிரம் ரூபாய் தருகிறோம் என்று கூறி, அதன் மூலம் 10,000 ரூபாய் கூடுதல் சுமையை ஏற்படுத்தி விட்டனர். தமிழகத்தில் வறுமைக் கோட்டில் உள்ளவர்கள், நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அதிமாக உள்ளனர். இவர்கள் பட்ஜெட் இல்லாமல் குடும்பத்தில் நடத்த முடியாது. விலைவாசி உயர்வால் அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்.
முதலமைச்சர் போர்க்கால நடவடிக்கை எடுத்து நடவடிக்கை வேண்டும். இதை சாதாரணமாக கடந்து போய் விட முடியாது. அரிசி மற்றும் மளிகை பொருட்கள் 8 முதல் 20 சகவீதம் வரை விலைவாசி உயந்துவிட்டது.
சீரகம் 300 ரூபாய் முதல் 700 ரூபாய் உயர்ந்துவிட்டது, துவரம் பருப்பு 120 முதல் 160 ரூபாய் உயர்ந்து விட்டது, புளி 160 முதல் 200 ரூபாய் உயர்ந்து விட்டது, உளுந்து 100 ரூபாய் முதல் 150 ரூபாய் உயர்ந்து விட்டது, பாசி பருப்பு 100 ரூபாய் முதல் 110 ரூபாய் உயர்ந்து விட்டது. இதைத்தான் எடப்பாடியார் இந்த அரசு முடங்கிப் போய்விட்டது தொடர்ச்சியாக கூறி வருகிறார்.
மதுரையில் கருணாநிதி நூலக திறப்பு விழாவிற்கு பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தி வரவழைக்க பள்ளிகளுக்கு சர்குலர் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்கள் கவலை அடைந்துள்ளனர். பொதுவாக, விளையாட்டு மைதானங்களில் அரசு விழா நடத்தக் கூடாது, தற்போது விளையாட்டு மைதானங்களில் அரசு விழா ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதனால், மைதானங்கள் சேதாரம் ஆகும், ஓடுதளங்கள் சேதாரம் ஆகும். எடப்பாடியார் ஆட்சிகாலத்தில் மைதானங்களில் அரசுகள் நடத்தவில்லை.
தற்போது தமிழகம் தத்தளித்து வருகிறது. வடகிழக்கு, தென்மேற்கு பருவ மழை வெள்ளத்தினால் அல்ல, தாங்க முடியாத விலைவாசி உயர்வால் தத்தளிக்கிறது. தமிழக தாய்மார்கள் கண்ணீர் வடிக்கின்றார்கள், வேதனை உச்சத்தில் இருக்கிறார்கள். இந்த அரசின் மீது கடும் கோபத்தில் உள்ளனர் என கூறினார்.
ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…
நானியின் HIT பிரபல தெலுங்கு நடிகரான நானி நடித்த “HIT:The Third Case” திரைப்படம் வருகிற மே 1 ஆம்…
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருக்கோவிலூர் ஒன்றிய பாக முகவர்கள்…
டாப் நடிகை சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி…
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…
இதயத்தை பதறவைத்த சம்பவம் காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் இந்தியா மட்டுமல்லாது…
This website uses cookies.