அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் குளறுபடி… எதையும் காது கொடுத்து வாங்காத திமுக அரசு.. ஆர்பி உதயகுமார் காட்டம்!!

Author: Babu Lakshmanan
19 January 2024, 4:33 pm

அலங்காநல்லூர் வரும் 24ஆம் தேதி நடைபெறுவது பொம்மை ஜல்லிக்கட்டு முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் விமர்சித்துள்ளார்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நகரியில் பழனி பாதயாத்திரை பக்தர்களுக்காக அம்மா கிட்சன் மூலம் தொடர்ந்து ஆறாவது நாளாக அன்னதானம் நடைபெற்று வருகிறது. இதனிடையே, அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. அதிமுக தேர்தல் விவகாரத்தில் தலையிட முடியாது என்று தீர்ப்பளித்தது.

அதனை ஒட்டி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி செய்தியாளர்களை சந்தித்த மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சருமான ஆர்பி உதயகுமார் எம்எல்ஏ கூறியதாவது :-

அதிமுக பொதுச்செயலாளராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பாகும். இதன் மூலம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என்பது திட்டவட்டமாகியுள்ளது. திமுக அரசு குளறுபடிகளின் அரசாக உள்ளது. முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளார்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் பரிசு விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மதுரை மாவட்ட நிர்வாகம் குளறுபடியை ஏற்படுத்தியுள்ளது. அது தொடர்பாக காது கொடுத்து கேளாத அரசாங்கமாக உள்ளது. தமிழகத்தில் இதுவரை நடைபெற்றது உண்மையான ஜல்லிக்கட்டு. எதிர்வரும் 24ஆம் தேதி நடைபெறுவது பொம்மை ஜல்லிக்கட்டு, என்று காட்டமாக தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏக்கள் எம் பி கருப்பையா மாணிக்கம் ஒன்றிய செயலாளர் வாடிப்பட்டி தெற்கு கொரியர் கணேசன், வடக்கு காளிதாஸ் மதுரை மேற்கு அரியலூர் ராதாகிருஷ்ணன், வாடிப்பட்டி யூனியன் சேர்மன் ராஜேஷ் கண்ணா, மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார், குருவித்துறை விஜய் பாபு காசிநாதன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 276

    0

    0