இந்தப் பிரிவு நிரந்தரமாக இருக்கனும்… கத்தோலிக்க பேராயர் விருப்பம் இதுதான் ; செல்லூர் ராஜு பேட்டி..!!

Author: Babu Lakshmanan
3 April 2024, 4:23 pm

பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறியது நிரந்தரமாக இருக்க வேண்டுமென கத்தோலிக்க பேராயர் கேட்டுக் கொண்டுள்ளதாக மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தெரிவித்துள்ளார்.

மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் சரவணன் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவுடன் இணைந்து கத்தோலிக்க மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமியிடம் அதிமுகவிற்கு வாக்களிக்குமாறு ஆதரவு கோரினார்.

மேலும் படிக்க: ‘யாருமே நம்ப மாட்டீறாங்க’…. விவாகரத்து முடிவில் மனைவி ; வீடியோ வெளியிட்டு அரசுப் பேருந்து ஓட்டுநர் தற்கொலை…!!!

பின்னர், செய்தியாளர்களை சந்தித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு கூறியதாவது :- மதுரையில் இருந்து வேளாங்கண்ணிக்கு நேரடியாக ரயில் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வேட்பாளர் சரவணன் பேராயரிடம் வாக்குறுதி அளித்தார். பாஜக உடன் அதிமுக கூட்டணி வைத்த கசப்பான சம்பவங்களை பேராயர் எடுத்துக் கூறினார்.

சட்டமன்றத் தேர்தலில் ஒன்றே முக்கால் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக தோல்வியுற்றது. சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தது கிறிஸ்தவ மக்களிடம் வருத்தத்தை ஏற்படுத்தியதாக பேராயர் கூறினார். பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது நிரந்தரமாக இருக்க வேண்டுமென பேராயர் கேட்டுக்கொண்டார். அதிமுகவிற்கு கிறிஸ்தவ மக்களின் ஆதரவு அளிக்கப்படும் என வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்க: சுவரில் சின்னம் வரைய அனுமதி மறுத்தால் மகளிர் உரிமைத் தொகை ரத்து… மக்களை மிரட்டும் திமுகவினர் ; இபிஎஸ் விடுத்த எச்சரிக்கை

நாடாளுமன்றத் தேர்தல் என்பது திருமண நிகழ்வை போன்றது, அப்படி நடக்கும் நிகழ்விற்கு மோடி, அமைச்சர் என எல்லோரும் வருவார்கள். திருமணத்திற்கு மாப்பிள்ளை யார் என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள். மதுரை தொகுதியின் மாப்பிள்ளை டாக்டர் சரவணன் என்பதை மக்கள் முடிவு செய்து விட்டார்கள். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடையும் என டிடிவி கூறுவது, எந்த இடத்தில் ஜோசியம் பார்த்து கூறுகிறார் என கூற வேண்டும், என பேசினார்.

  • srikanth tells about the incident when he was watching dragon movie டிராகன் படத்துக்கு போனேன், கடுப்பேத்திட்டாங்க- ஆதங்கத்தை கொட்டிய நடிகர் ஸ்ரீகாந்த்…