அடிக்கடி ஆடியோ வெளியிடும் அதிபுத்திசாலி IPS… இந்த சாதாரண சின்ன விஷயம் கூட தெரியாதா..? செல்லூர் ராஜு பாய்ச்சல்!

Author: Babu Lakshmanan
26 April 2024, 1:59 pm

தமிழகத்தில் நல்லது செய்ய மத்தியில் மோடியோ அல்லது ராகுலோ, யார் வந்தாலும் வரவேற்போம் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் பொதுமக்களுக்கு நீர், மோர் வழங்கும் பந்தலை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த போது, 52 ஆண்டுகளாக மக்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உழைக்கும் கட்சி அதிமுக என்று கூறிய அவரிடம், வாக்காளர்கள் பலரின் பெயர் பட்டியலில் இருந்து விடுபட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், வாக்காளர்கள் பலரின் பெயர் பட்டியலில் இருந்து உண்மையிலேயே விடுபட்டுள்ளது. இதை தேர்தல் ஆணையத்தின் மெத்தனப்போக்கு என்று சொல்வதா..? என்ன சொல்வது எனத் தெரியவில்லை. மதுரையில் தான் இப்படி இருக்கிறது என பார்த்தால் எல்லா மாவட்டங்களிலும் அப்படித்தான் உள்ளது.

ஒவ்வொரு அரசியல் இயக்கங்களும் தேர்தல் காலத்தில் தங்கள் கட்சியினர் மூலம் பூத் சிலிப் வழங்க தேர்தல் ஆணையம் தடை செய்தது. தொடர்ந்து அரசு அலுவலர்கள், பணியாளர்களை கொண்டு இப்பணியை செய்தார்கள். அப்போது பூத் சிலிப்பை அரசு ஊழியர்களாக இருந்தவர்கள் கொடுத்தார்கள்.

மேலும் படிக்க: சேகோ ஆலை அதிபர் சாவில் திடீர் திருப்பம்… மனைவி கொடுத்த கடிதம்… வசமாக சிக்கிய மகன்… பின்னணியில் பகீர்!!

இப்போது திமுக ஆட்சியில் ஒப்பந்த பணியாளர்கள் அதிகம் இருந்ததால் பூத் சிலிப் வழங்கும் பணியில் அதிகம் கவனம் செலுத்தவில்லை. தேர்தல் ஆணையம் கட்சியினர் பூத் சிலிப் வழங்குவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். பூத் சிலிப் குறித்தும், வாக்காளர் பட்டியல் குளறுபடி குறித்து அதிபுத்திசாலி ஐபிஎஸ் படித்தவர் தற்போது பேசுகிறார். ஏன் முன்னரே பேசவில்லை.

குறிப்பாக பாஜக வாக்காளர்கள் தூக்கப்பட்டு விட்டனர் என சொன்னால், அதை ஏன் முன்பே ஆணையத்திடம் அண்ணாமலை கூறவில்லை. தேர்தலில் தனக்கு சரியான வாக்குப்பதிவு இல்லை. தன்னை மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை என்பதால் இதுபோன்று அண்ணாமலை பேசுகிறார்.

இதையெல்லாம் ஆணையத்திடம் மனுவாக ஏற்கனவே கொடுத்து இருக்கனும். ஒருவர் போனில் பேசியதை டேப் செய்து வெளியிடக்கூடிய திறமை படைத்த அண்ணாமலை, கட்சியினர் ஊழல் பட்டியலை வெளியிடும் அண்ணாமலை, வாக்காளர் பட்டியலில் இருந்து பாஜக வாக்காளர்கள் விட்டுப்போயுள்ளனர் என முன்பே சொல்லியிருக்க வேண்டாமா?

ஆனால் தற்போது கேரளாவுக்கும் கர்நாடகத்திற்கும் அண்ணாமலை போகிறார். தமிழகத்திற்கு யார் நல்லது செஞ்சாலும் வரவேற்போம். அது ராகுலா இருந்தாலும் சரி…? மோடியா இருந்தாலும் சரி..? ஆனால் தமிழகத்தில் பாதகமானதை செய்தால் நிச்சயம் எதிர்ப்போம். அதை எடப்பாடி பழனிசாமி தெளிவாக சொல்லி உள்ளார். திமுக எம்.பிக்களை போல அதிமுக எம்பிக்கள் இருக்க மாட்டார்கள், எனக் கூறினார்.

தேர்தல் பிரச்சாரத்தில் மோடி பேசியது குறித்த கேள்விக்கு, “இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு. ஒரு மதத்தை குறி வைத்து பேசுவது உயர்ந்த பதவியில் உள்ள பிரதமர் மோடி ஜி பேசுவது சரியல்ல. அதை அதிமுக பொதுச்செயலாளரும் கூறி உள்ளார். எம்.ஆர்.ராதா கூறுவது போல தமிழகத்தில் எல்லோரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

தமிழகத்தில் இந்தியாவில் தலைவிரித்தாடும் போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளது. நாளைய நாட்டின் நம்பிக்கை நட்சத்திரங்கள், விடிவெள்ளிகளிடம் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்திருப்பது மனதை வேதனையடையச் செய்கிறது.

வெறும் வழக்கு, குண்டாஸ் போடுவது மட்டுமல்லாமல், இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும், புதிய சட்டங்களை கொண்டு வர வேண்டும். போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களில் அரபு நாடுகளை போல தண்டனை வழங்க வேண்டும். ஆட்சிக்கு வரும் முன்பு கனிமொழி கூறியது போல தமிழகத்தில் ஒரு சொட்டு மது இல்லாத மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், என பேசினார்.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!