மதுரை ; திமுக ஆட்சி காலத்தில் மதுரை ஒரு தீவு போல் மாற்றி விட்டார்கள் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
மதுரை சோலை அழகுபுரம் பகுதியில் புதியதாக சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜையில் பங்கேற்ற முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது ;- ஜல்லிக்கட்டு தீர்ப்பு வரவேற்கக் கூடியது. சட்ட நுணுக்கங்கள் அறிந்து அதிமுக ஆட்சிக் காலத்தில் சிறப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். தொகுதி நிதிகளை போராடித் தான் பெற வேண்டி இருக்கிறது. உங்கள் தொகுதியின் முதல்வன் திட்டத்தின் கீழ் 10 கோரிக்கைகள் பெறப்பட்டது. தற்போது கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது.
நம்முடைய முதல்வருக்கு அப்பப்ப ஞாபகம் மறதி வந்து விடுகிறது. ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு சொட்டு மது கூட கிடைக்காது என்று கூறினார்கள். தமிழகத்தில் மது ஆறு ஓடுகிறது. கள்ளச்சாராயத்திற்கு பலர் உயிரிழந்துள்ளனர். இன்னும் பல உயிர் ஆடிக் கொண்டிருக்கிறது. குடும்பமே கள்ளச் சாராயம் குடித்தவர் இறக்க வேண்டும் என நினைக்கும் அளவுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் சாலை விபத்தில் இறப்பு 2 லட்சம் மூன்று லட்சம் கொடுக்கப்படுகிறது. ஆனால், சாராயம் குடித்தவர்களுக்கு வரலாறு காணாத அளவிற்கு 10 லட்சம் கொடுக்கப்படுகிறது. இந்தியாவுக்கே இந்த அரசாங்கம் முன்னோடியாக உள்ளது. கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு இவ்வளவு தொகை வழங்கியது இல்லை. சாராயம் வியாபாரிகள் சொத்துக்கள் பறிமுதல் செய்து, அந்த சொத்தை விற்று நிதி கொடுத்திருக்கலாம். அரசு நிதி கொடுத்திருக்கிறார்கள்.
திராவிட மாடல் என வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லாமல் நடந்து கொள்கிறது. முதலமைச்சர் பொம்மை முதல்வர் என்பதை மீண்டும் பலமுறை உறுதி செய்து கொண்டிருக்கிறார். ஒரு மாற்றுத்திறனாளி தமிழக அரசையே ஏமாற்றி உள்ளார்.
உள்ளூர் அமைச்சர், விளையாட்டு துறை அமைச்சர், முதலமைச்சர் என அனைத்தையும் ஏமாற்றி உள்ளார்கள். அரசு அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த ஆட்சியில் நிர்வாகம் சரி இல்லை. ஆகையால் தான் கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களுக்கு அமைச்சர்கள் துணை போகிறார்கள். கள்ளச்சாராயத்தில் உயிர் இழந்தவர்களுக்கு நிதி வழங்கப்படுகிறது. சித்திரை திருவிழாவில் உயிரிழந்தோருக்கும் நிதி வழங்கப்பட்டது.
சித்திரைத் திருவிழாவை சட்ட ஒழுங்கு பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை. திமுக ஆட்சி காலத்தில் மதுரை ஒரு தீவு போல் மாற்றி விட்டார்கள். மதுரையில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இடமிருந்து நிதி அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதால், மதுரை மேயர் வேலை பார்க்காமல் அமைதியாக இருக்கிறார். திமுகவில் 2 கோடி தொண்டர்களை இணைப்பதாக கூறி நியாய விலை கடைகளில் ஆதார் அட்டைகளை வழுக்கட்டாயமாக வாங்குவதாக புகார் அளித்துள்ளது.
திமுக வட்டச் செயலாளர் திமுக நிர்வாகிகள் அநாகரீகமாக நடந்து கொள்கிறார்கள். மதுரையில் மகா மகம் திருவிழா நடைபெறுவது போல அதிமுகவின் பொது கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. அதற்கு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது, எனக் கூறினார்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.