சதுரங்க வேட்டை பாணியில் தமிழகத்தை ஏமாற்றுகிறார் ஸ்டாலின்… தேர்தல்களில் திமுகவை மக்கள் வச்சு செய்யனும் : செல்லூர் ராஜு

Author: Babu Lakshmanan
26 January 2023, 11:27 am

வாரிசு அரசியல்கள் இனி கிடையாது என்பதை உணர்த்தும் வகையில், வரும் தேர்தல்களில் திமுகவை மக்கள் வச்சு செய்ய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

மதுரை மாநகர் மாவட்ட அதிமுக மாணவர் அணி சார்பில் T.M. கோர்ட் பகுதியில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசும்போது;- தற்போது பாஸ்ட்புட் நோக்கி செல்லும் இந்த காலத்திலும் தாய் மொழிக்காக தனது உயிர் நீத்து தியாகம் செய்தவர்களை நினைவு கூறுவது மாணவர்களின் தலையாய கடமை. தமிழ் மொழிக்கு வேண்டி தாலமுத்து, நடராசன் மற்றும் நாடாளுமன்றத்தில் அண்ணா பல கூட்டங்களில் சிறப்புரை ஆற்றி இருக்கிறார்.

திமுகவிற்கு தமிழ் மொழி குறித்து பேச அருகத்தையே இல்லை. முக கருணாநிதி தமிழ் மொழி வளர்ச்சிகாக எந்த ஒரு தியாகத்தை செய்ததே கிடையாது. மதுரையில் 1981ல் நடந்த 5வது உலக தமிழ் மாநாட்டில் திருட்டு சம்பவங்கள் ஏதும் நடக்கவில்லை. அப்போது திமுக தொண்டர்கள் மாநாட்டிற்கு செல்ல கூடாது என்று கலைஞர் சொன்னார், அதான் திமுகவினர் அங்கு வரவில்லை,‘. அதனால் திருட்டும் நடக்கவில்லை.

சதுரங்க வேட்டை படத்தில் ஒருவனை ஏமாற்ற வேண்டும் என்றால், அவனிடம் ஆசையை தூண்ட வேண்டும் என்ற பாணியில் கலைஞர் குடும்பம் தமிழகத்தை ஏமாற்றி கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் அப்பனுக்கு தப்பாமல் ஸ்டாலினும் தமிழகத்தை ஏமாற்றி வருகிறார்.

தேர்தலுக்கு முன்பு முக.ஸ்டாலின் சதுரங்க வேட்டை படத்தை பார்த்து அதே பாணியில், நீட் தேர்வு ரத்து, பெண்களுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும், கேஸ் மானியம் வழங்கப்படும், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறை படுத்தப்படும் என்று அவர்களுக்கும் அல்வா கொடுத்து விட்டார்.

உதயநிதி ஸ்டாலின் நீட்டை ரத்து செய்வேன் சொன்னார், ஆனால் நீட் தேர்வை உறுதி செய்தது முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மனைவிதான் நீதிமன்றத்தில் வாதடியதுதான். இந்தநிலையில் காங்கிரஸ் உடன் கூட்டணி இவ்வாறாக மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருகின்றனர்.

ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி மற்றும் அவரின் வாரிசுக்கு திமுக தலைவராவார்கள், ஆனால் அதிமுகவில் உங்களில் ஒருவரும் கூட அடுத்த தலைவர் ஆக உயரலாம். வெல்லம் கூட வடமாநிலத்தில் தான் கொள்முதல் செய்தனர் ஆனால் தமிழ் தமிழ் என்று திமுகவினர் பேசி வருகின்றனர். சன்ரைஸ் பள்ளிக்கூடத்தில் தமிழில் பேசினால் மாணவர்களிடம் அபராதம் விதிக்கின்றனர்.

உதயநிதியின் ரெட் ஜெயண்ட், மேலும் சன்டிவி, ஸ்டாலின் என்பவைகள் தமிழில் இல்லாமல் திமுகவினர் தமிழ் தமிழ் என மக்களை ஏமாற்றி வருகின்றனர். வாரிசு அரசியல்கள் இனி கிடையாது என்பதை உணர்த்தும் வகையில், வரும் தேர்தல்களில் திமுகவை மக்கள் வச்சு செய்ய வேண்டும், என தெரிவித்துள்ளார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!