மக்களின் எதிர்ப்பை புரிந்து கொண்ட திமுக கவுன்சிலர்கள் : எதையும் கண்டுக்க மாட்டாங்க : செல்லூர் ராஜு விமர்சனம்!!

Author: Babu Lakshmanan
4 April 2023, 2:30 pm

மதுரை : எதையும் கண்டுகொள்ளாத மாநகராட்சியாக மதுரை மாநகராட்சி இருப்பதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

P.K.மூக்கையாத்தேவரின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு மதுரை அரசரடி ரவுண்டானாவில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியதாவது :- மதுரையில் பகுதி வளர்ச்சியடையும் என்று நினைத்து மதுரை மக்கள் திமுக கவுன்சிலர்களுக்கு வாக்களித்தார்கள். எதையும் கண்டுகொள்ளாத மாநகராட்சியாக மதுரை மாநகராட்சி உள்ளது.

மக்களின் எதிர்ப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் தான் திமுக மாமன்ற உறுப்பினர்களே, நேற்று மாமன்ற கூட்டத்தொடரில் தங்களுடைய குரலை ஒலித்திருக்கிறார்கள், எனத் தெரிவித்தார்.

  • Nayanthara Test movie news சிம்பு பிறந்த நாளுக்கு நயன்தாரா எடுக்க போகும் திடீர் முடிவு…ரசிகர்களுக்கு செம ட்விஸ்ட்..!