உதயநிதியின் தலைக்கு சன்மானம்… இது வன்முறை அல்ல ; முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சொன்ன பதில்..!!

Author: Babu Lakshmanan
5 September 2023, 2:34 pm

சனாதனம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தலைக்கு சன்மானம் அறிவித்த நிலையில், அயோத்தி சாமியார் மனம் வெதும்பி பேசியுள்ளதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 152வது பிறந்த தினத்தை முன்னிட்டு மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் அளித்த பேட்டியின் போது, உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த பேச்சு தொடர்பாகவும், அயோத்தி சாமியாரின் சர்ச்சை பேச்சு தொடர்பாகவும் கேட்டதற்கு, “சனாதனம் குறித்த கருத்துக்குள் நான் செல்ல விரும்பவில்லை. அதிமுக அனைத்து மதத்தினரையும் சமமாக கருதக்கூடிய இயக்கம். அனைத்து மதத்தினரும் மதிக்கக் கூடிய கட்சி அதிமுக. இக்கட்சியில் சாதி,மத வேறுபாடுகள் கிடையாது.

சாதுக்களே இந்த அளவிற்கு மனம் வெதும்பி போய் பேசி இருக்கிறார்கள். அதை வன்முறையாக நான் கருதவில்லை. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து,” என கூறினார்.

  • pavni reddy condition on amir for marriage மதம் மாறச் சொன்ன அமீர்? பாவனி போட்ட ஒரே ஒரு கண்டிஷன்! இப்படி எல்லாம் நடந்திருக்கா?