பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் திரைப்படத்தை விட நிதியமைச்சர் ஆடியோ தான் இப்போ ஹைலைட் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கிண்டலாக கூறியுள்ளார்.
மதுரை பெத்தானியபுரம் பகுதியில் மதுரை மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் நடைபெற்று வரும் மே தின பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டார்.
அப்போது, அவர் பேசியதாவது :- ரஜினிகாந்த் படம் போல் மீசை வச்ச ரஜினி, மீசை இல்லாத ரஜினி என்பது போல் திமுக செயல்படுகிறது. எதிர்க்கட்சிய இருக்கும் போது ஒரு பேச்சு ஆளுங்கட்சியாக இருக்கும் போது மாறிவிடுவார்கள்.
முதல்வருக்கு உழைப்பவர்களின் கஷ்டம் தெரியுமா..? நோகாம முதலமைச்சர் பதவி வாங்கி விட்டார். அவருக்கு தொழிலாளுடைய வழி எப்படி தெரியும்? சட்ட மசோதா ஏற்றிவிட்டு போராட்டம் அறிவித்த பிறகு எதிர்ப்பு தெரிவித்த பிறகு வாபஸ் வாங்கியுள்ளார். நிறுத்தி வைக்கிறேன் என்று சொல்லிய முதல்வர் வாபஸ் பெற்று விட்டாதாக கூறி இன்று சிவப்பு சட்டை அணிந்து மே தினம் கூட்டத்திற்கு வருகிறார்.
தொழிலாளர்களுக்கு எதுவும் செய்யாமல் கம்யூனிஸ்டுகள் திமுகவுடன் ஒட்டிக்கொள்கிறார்கள். எதற்கு? எல்லாம் பணத்திற்காகதான். தேர்தலுக்கு 25 கோடி ரூபாய் பெற்றவர்கள் அடுத்த முறை 50 கோடி ரூபாய் எதிர் பார்த்து தான். பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் திரைப்படத்தை விட நிதியமைச்சர் ஆடியோ தான் ஹைலைட். மதுரைக்காரன், வீரமானவன், அமைச்சர் தியாகராஜனை நாம் ஏற்றுக் கொள்ளலாம்.
ஸ்டாலின் அப்பா, உதயநிதி தாத்தா இன்பநிதியின் கொள்ளு தாத்தாவிற்கு மதுரையில் நூலகம் கட்டப்பட்டுள்ளது. வேறெதுவும் மதுரைக்கு செய்யவில்லை. எந்த திட்டங்களும் கொண்டுவரல. திமுக வெட்டக்கூடிய ரிப்பன் அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களில் செயல்படுத்தப்பட்டதுதான்.
கோவைக்கு சிறப்பு நிதி ஒதுக்கியவர்கள். நிதி அமைச்சர் உள்ள நம்ம மதுரை தொகுதிக்கு நிதி ஒதுக்கவில்லை. நீங்கள் Without டிக்கெட் தான். அன்று டிடிஆர் ரயிலில் இருந்து இறக்கி விட்டிருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது. திமுகவை வீட்டிற்கு அனுப்பும் பணியை தேர்தல் எப்போது வந்தாலும் நிச்சயமாக தொழிலாளர்கள் செய்வார்கள், என்றார்.
நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…
கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…
கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…
உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…
ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…
This website uses cookies.