அண்ணா, பெரியார் காலத்திலேயே சனாதனம் ஒழிந்துவிட்டதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க., மாவட்ட துணைத் தலைவர் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ முன்னிலையில் இணைந்தனர். அப்போது செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசியதாவது :- தம்பி உதயநிதி வரலாறு தெரியாமல் பேசுகிறார். விளையாட்டுத்துறை அமைச்சர் விளையாட்டு பிள்ளையாகவே உள்ளார். சனாதனம் அண்ணா பெரியார் காலத்திலேயே ஒழிக்கப்பட்டது. சீர்திருத்த திருமணங்களை நடத்தியவர் அண்ணா, அவர்களது தாத்தா, ஜெயலலிதா, எடப்பாடியார் வரை தற்போது பின்பற்றி வருகிறோம்.
அண்ணா, பெரியார் கொண்டுவர வேண்டிய மாற்றத்தை முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., கொண்டு வந்துவிட்டார். சத்துணவு திட்டம் மூலமாக சமமாக அமர வைத்து உணவளித்தார். இஸ்லாமியர்கள் கயிலி கட்டியவர்கள் எல்லாம் தீவிரவாதிகள் என அவர் தாத்தா காலத்தில் கூறினார்கள். அதையெல்லாம், உதயநிதிக்கு தெரியாது. திமுக தேர்தல் வருவதற்கு முன்பு ஒன்று பேசுவார்கள் பின்பு ஒன்று பேசுவார்கள்.
திமுக 1000 ரூபா கொடுத்தது மக்களிடையே ஆதரவு கொடுக்கவில்லை எதிர்ப்பவளையை ஏற்படுத்தி உள்ளது. தி.மு.க., ஒரு கோடியே ரூ.6 லட்சம் பேருக்கு தான் ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளனர். மீதி பேருக்கு ஸ்வாக தான்.
பி.ஜே.பி.,க்கும் எங்களுக்கும் பிரச்னை உள்ளது என யாராவது பேசி இருக்கிறோமா?., மாநில தலைவர் அண்ணாமலை சொன்ன விதம் தவறு என தான் கூறினோம். எங்களுக்கு நட்டா ஜி, அமித்ஷா ஜி, மோடி ஜி மதிக்கிறார்கள், அது போதும். எப்போதும் ஆயிரம் ரூபாய் கொடுத்தால் பத்தாது. நாங்களும் நாளை மோடிஜி தான் பிரதமராக வேண்டும் என சொல்கிறோம்.
தமிழ்நாட்டில் முதல்வர் எடப்பாடியார் தான். அ.தி.மு.க., கட்சி உலக தரத்தில் ஏழாவது இடத்தில் உள்ளது. முதலில் உதயநிதி தம்பியிடம் சொல்லி மதுரைக்கு ஏதாவது செய்ய சொல்லுங்கள். கலைஞர் பெயரில் நூலகம் வைப்பது பெருமைதான். ஆனால், மதுரையில் சாலைகள் குண்டு குளியும் ஆக உள்ளது. கொசு தொல்லை, இப்படி பல்வேறு அடிப்படைப் பிரச்னைகள் உள்ளது.
நேற்று உதயநிதி கூட்டத்தில் கலந்து கொண்டவருக்கு ஆயிரம் ரூபாயாம். இன்று கறிக்கடையில் எல்லாம் ஓவர் கூட்டம். எல்லாம் உதயநிதி கொடுத்தது பணமாக தான் இருக்கும். அடிக்கடி உதயநிதி மதுரைக்கு வர வேண்டும் கூட்டம் நடத்த வேண்டும் என்பதை நான் கேட்டுக்கொள்கிறேன், எனக் கூறினார்.
கனவுக்கன்னி தற்கால இளைஞர்களின் கனவுக்கன்னிகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் மிக பிரபலமான நடிகையாக வலம்…
தமிழ் திரைப்பிரபலங்களின் திடீர் மறைவு திரையுலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. அந்த வகையில் பிரபல திரைப்பட இயக்குநர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.…
தமிழக வெற்றி கழகம் கட்சியின் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் இன்று மாலை கோவை சக்தி சாலை குரும்பபாளையம் பகுதியில்…
விஜய்யின் ரோட் ஷோ தவெக தலைவர் விஜய் இன்று கோவையில் நடைபெறும் தனது கட்சியின் பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்கிறார்.…
சமீபத்தில், பிரபலமான ஹாலிவுட் வெப் தொடரான Wednesday சீசன் 2-ன் டிரெய்லர் வெளியாகி, கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை…
This website uses cookies.