நூலிழையில் உயிர்தப்பிய முன்னாள் அமைச்சரின் மகன்… போராடி காருடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள் ; மதுரையில் பரபரப்பு சம்பவம்!!

Author: Babu Lakshmanan
12 October 2023, 6:23 pm

மதுரை திருப்பரங்குன்றம் ரயில்வே சுரங்க பாதையில் கார் சிக்கிய நிலையில், அதில் இருந்த முன்னாள் அமைச்சரின் மகனை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

முன்னாள் அமைச்சர் தமிழ் குடிமகனின் மூன்றாவது மகன் பாரி. இவர் மதுரை புதூர் டிஆர்ஓ காலனி பகுதியில் வசித்து வருகிறார். இவர் இன்று மதியம் தனது காரில் புதூரில் இருந்து திருப்பரங்குன்றம் தியாகராஜா கல்லூரி சென்றுள்ளார்.

நேற்று இரவு மதுரையில் பெய்த கனமழையால் திருப்பரங்குன்றம் ரயில்வே சுரங்க பாதை முழுவதும் நீர் நிறைந்துள்ளது. தண்ணீர் இருப்பதை அறியாமல் பாரி காருடன் உள்ளே சென்றுள்ளார்.

இதில் கார் முற்றிலும் மூழ்கிய நிலையில் உடனடியாக திருப்பரங்குன்றம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திருப்பரங்குன்றம் உதயகுமார் தலைமையிலான ஆறு பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள், சுமார் அரை மணி நேரம் போராடி நீரில் மூழ்கி இருந்த காரை பத்திரமாக மீட்டனர்.

கார் முழுவதுமாக நீரில் மூழ்காததால் முன்னாள் அமைச்சர் தமிழில் குடிமகன் பாரி நூலிழையில் உயிர்தப்பினார். கடந்த மாதமும் இதே போல் ஒரு உயர் ரக கார் இந்த சுரங்கப்பாதையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த சுரங்க பாதையில் அடிக்கடி இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதால் இதற்கு தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 414

    0

    0