சட்டப்பேரவை தேர்தலில் 200 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறும் ; முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி உறுதி

Author: Babu Lakshmanan
8 September 2023, 8:38 pm

தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தூத்துக்குடியில் தெரிவித்தார்

பூத்தமிட்டி அமைக்கும் பணிகள் குறித்து தூத்துக்குடி அதிமுக தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி விஇ ரோட்டில் உள்ள தனியார் ஹோட்டல் கூட்டரங்கில் வைத்து நடைபெற்றது. இதில் அதிமுக கழக தலைமை நிலைய செயலாளரும், கோவை புறநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி தலைமையில் நடைபெற்றது.

இதில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் முன்னிலை வகித்தார். ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.

தொடர்ந்து, அவர் பேசியதாவது :- முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எப்போது தேர்தல் நடந்தாலும் அடுத்த முதல்வர் எடப்பாடியார் தான். தூத்துக்குடியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றி பெற அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்றி அண்ணா திமுக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும்.

சட்டமன்ற தேர்தலில் வெகு விரைவில் வர உள்ளது. சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகள் வெற்றி பெற்று எடப்பாடியார் தான் அடுத்த முதல்வராக வருவார். தூத்துக்குடியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் இரட்டை இலை வெல்வதற்கு நீங்கள் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும், எனக் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளர் சின்னதுரை, மாவட்ட அமைத்தலைவர் வழக்கறிஞர் திருப்பாற்கடல், முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

  • ajith kumar changed the lyrics of god bless u song in good bad ugly அது வேண்டாம் இதை வச்சிக்கோ- இந்த பாடல் வரியை மாற்றியது அஜித்தா?