திமுக அரசைக் கண்டித்து 2ம் தேதி அதிமுக உண்ணாவிரதப் போராட்டம் ; கோவையில் போராட்ட அரங்கை ஆய்வு செய்தார் எஸ்பி வேலுமணி!

Author: Babu Lakshmanan
28 November 2022, 10:12 pm

கோவையில் வரும் 2ந்தேதி அதிமுக சார்பாக உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற உள்ள நிலையில், போராட்டம் நடைபெற உள்ள இடத்தை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆய்வு செய்தார்.

கோவை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் சாலைகளை சீரமைக்க தவறியமைக்காகவும், மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, கழிவு நீர் இணைப்பு கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு போன்றவைகளை ஏற்படுத்தியமைக்காகவும், திமுக அரசை கண்டித்து, அ.தி.மு.க. சார்பில் வரும் 2-ஆம் தேதி கோவை சிவானந்தா காலனியில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.

இதற்கு தமிழக சட்டமன்ற எதிர்கட்சி பழனிசாமி தலைமையேற்க உள்ள நிலையில், போராட்டம் நடைபெற உள்ள கோவை சிவானந்தா காலனியில் உண்ணாவிரத போராட்டத்திற்கான ஏற்பாடுகளை தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது, சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ச்சுனன், பி.ஆர்.ஜி.அருண்குமார், ஏ.கே. செல்வராஜ், அமுல்கந்தசாமி மற்றும் முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

  • actress who starred with Ajith and Vijay is in a pathetic state படுக்கைக்கு அழைத்த நண்பர்கள்.. அஜித், விஜயுடன் நடித்த நடிகையின் பரிதாப நிலை!