எப்போது தேர்தல் வந்தாலும் இபிஎஸ் தான் CM : அடித்துச் சொல்லும் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி!!!

Author: Babu Lakshmanan
27 April 2024, 4:21 pm

தமிழகத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் மீண்டும் முதல்வராக வருவார் என முன்னாள் அமைச்சர் வேலுமணி உறுதியாக தெரிவித்தார்.

கோவை சாய்பாபா காலனி NSR ரோடு பகுதியில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் அதிமுக நிர்வாகிள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க: திடீரென மத சர்ச்சையில் சிக்கிய CWC இர்ஃபான்… போடா செங்கல் சைகோ… என லிஸ்ட் போட்டு பதிலடி…!!

இதனைதொடர்ந்து, முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி பேசியதாவது :- அதிமுக சார்பில் தமிழக முழுவதும் கோடைகாலங்களில் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டு வருவது வழக்கம். இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்திலும் நீர் மோர் பந்தல் மக்கள் திறக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அதை தீர்க்கக் கூடிய கட்சி அதிமுக. மக்களின் எதிர்பார்ப்பு, மக்களின் நம்பிக்கை, தமிழகத்தின் எதிர்காலம் எடப்பாடியார்தான். எப்பொழுது சட்டமன்ற தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் முதல்வராக வருவார். நாடாளுமன்ற தேர்தலில் முடிவுகள் கண்டிப்பாக தெரியவரும். தமிழக மக்கள் பல பிரச்சனைகளில் இருக்கின்றனர்.

கொரோனா காலங்களில் மக்களுக்காக செயல்பட்டது அதிமுக. அந்த அடிப்படையில் மீண்டும் எடப்பாடியாரின் ஆட்சி கண்டிப்பாக அமையும். தமிழகத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் மீண்டும் முதல்வராக வருவார் என அழுத்தம் திருத்தமாக சொன்ன முன்னாள் அமைச்சர் வேலுமணி, கோவை மக்களவை தொகுதி முடிவு குறித்து அழுத்தமாக கருத்து தெரிவிப்பதை தவிர்த்து சென்றது குறிப்பிடத்தக்கது.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 235

    0

    0