முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் மீண்டும் சோதனை : வருவாய், பொதுப்பணி மற்றும் லஞ்ச ஒழிப்புதுறையினர் குவிந்ததால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
20 July 2022, 12:59 pm

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் அவரது சொத்து ஆவணங்கள் சரிபார்க்கும் சோதனையில் லஞ்சஒழிப்பு துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

திருச்செங்கோடு அருகே அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் சொத்து ஆவணங்கள் குறித்து வருவாய், பொதுப்பணித்துறை மற்றும் லஞ்சஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டு டிசம்பரில் தங்கமணி வீட்டில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

லஞ்ச ஒழிப்பு சோதனையில் கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்கள் குறித்து விசாரித்து, அதனை மதிப்பீடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

  • Pushpa 2 vs Mufasa collection புஷ்பா2-க்கே பயம் காட்டிய முஃபாஸா…வசூலில் முரட்டு சாதனை..!
  • Views: - 907

    0

    0